காலிப் பணியிடங்களை நிரப்புவது குறித்து ஒன்றிய பெட்ரோலியத்துறை அமைச்சகத்திடம் தமிழச்சி தங்கபாண்டியன் கேள்வி

viduthalai
1 Min Read

புதுடில்லி,ஆக.9- மக்களவையில், ஒன்றிய பெட் ரோலியத்துறை அமைச்சகத்தில் கீழ் இயங்கும் அலுவலகங்களில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவது குறித்து தென்சென்னை நாடாளு மன்ற உறுப்பினர் தமிழச்சி தங்க பாண்டியன் கேள்வி எழுப்பினார்,
அதன் விபரம்…

கேள்விகள்: அ. ஒன்றிய பெட் ரோலியம், இயற்கை எரிவாயுத்துறை அமைச்கத்தின் கீழ் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்கள், அதன் சார்பு அலுவலகங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதா? அப்படி யென்றால் அவற்றின் விவரங்கள்.

ஆ. ஒன்றிய பெட்ரோலியம், இயற்கை எரிவாயுத்துறை அமைச்ச கத்தின் கீழ் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்கள், அவற்றின் உதவி பெறும் நிறுவனங்களில் 1.7.2024 நிலவரப் படி பணி வகிப்போரின் எண் ணிக்கை?
இ. ஒன்றிய பெட்ரோலியம், இயற்கை எரிவாயுத்துறை அமைச்கத்தின் கீழ் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களில் எஸ்சி, எஸ்.டி,ஓபிசி, சிறுபான்மை பிரவினர்களுக்கான காலிப் பணியிடங்களை நிரப்ப ஒன்றிய அரசு சிறப்புப் பணியமர்த்தும் திட்டத்தை தொடங்கியுள்ளதா?

ஒன்றிய பெட்ரோலியம், இயற்கை எரிவாயுத்துறை அமைச் கத்தின்ஒன்றிய பெட்ரோ லியம், இயற்கை எரிவாயுத்துறை இணை அமைச்சர் சுரேஷ் கோபி அளித் துள்ள பதில்:

அ-இ ஒன்றிய பெட்ரோலியம், இயற்கை எரிவாயுத்துறை அமைச்கத்தின் கீழ் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களில் எஸ்சி, எஸ்டி,ஓபிசி, சிறுபான்மை பிரிவினர்களுக்கான காலிப் பணியிடங்களை நிரப்பும் பணி வழங்கமாக நடைபெற்று வருகிறது.

ஒன்றிய பெட்ரோலியம், இயற்கை எரிவாயுத்துறை அமைச்கத்தின் கீழ் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்கள், அவற்றின் உதவி பெறும் நிறுவ னங்களில் 1.7.2024 நிலவரப்படி பணி வகிப்போரின் எண்ணிக்கை 92849 ஆகும்.
ஒன்றிய பெட்ரோலியம், இயற்கை எரிவாயுத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களில் எஸ்சி, எஸ்டி,ஓபிசி, சிறுபான்மை பிரிவினர்களுக்கான காலி பணி யிடங்கள் ஒன்றிய பணியாளர் மற்றும் பயிற்சித்துறை, ஒன்றிய பொதுத்துறை நிறுவனங்களின் வழிகாட்டுதல்கள் கீழ் நிரப்பப் படுகின்றன. எஸ்சி, எஸ்டி,ஓபிசி, சிறுபான்மை பிரிவினர்களுக்கான காலி பணியிடங்களை நிரப்ப சிறப்பு பணியமர்த்தும் திட்டம் அவ்வப்போது செயல்படுத்தப் படுகிறது.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *