உத்தரப்பிரதேசத்தில் மதவெறி ஆட்டம் பர்தா அணிந்து வந்த மாணவிக்கு பள்ளியில் அனுமதி மறுப்பு

2 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

புதுடில்லி, ஆக. 9- உத்தரப் பிரதேசம் கான்பூரில் உள்ள ஒரு மேல்நிலைப் பள்ளியில் பர்தா, ஹிஜாபுடன் வந்தமாணவிகளுக்கு அனுமதிமறுக்கப்பட்டுள்ளது. சீருடைகளில் வராதவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பள்ளிநிர்வாகம் முடிவு செய்துள்ளது.
உபியின் கான்பூரிலுள்ள பில்ஹர் பகுதியில், பில்ஹர்இண்டர் காலேஜ் எனும் பெயரில் ஒரு தனியார் மேல்நிலைப்பள்ளி உள்ளது. 1960இல் துவங்கிய இப்பள்ளியில் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை ஹிந்தி மொழிவாரி வகுப்புகள் நடைபெறுகின்றன. நேற்று (8.8.2024) காலை இப்பள்ளிக்கு வந்த 4 முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் மற்றும் பர்தாவை அணிந்திருந்தனர். இவர்கள் நுழைவு வாயிலில் தடுத்து நிறுத்தப்பட்டு, சீருடை அணிந்து வரும்படி அறிவுறுத்தப்பட்டனர். இதற்குமறுத்த நால்வரும் முதலமைச்சர் அறைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அங்கிருந்த பொறுப்பு முதலமைச்ச ரான சூரஜ்சிங் யாதவ், அரசு உத்தர வின்படி பள்ளிக்கு பயில வருபவர்கள் அதற்கான சீருடைகளை அணிந்து வர வேண்டும் என அறிவுறுத்தினார். நுழைவு வாயிலின் அருகிலுள்ள அறையில் சீருடைகள் மாற்றிய பின் பள்ளியினுள் வர வேண்டும் எனவும், இதற்கு மறுப்ப வர்களை பள்ளியில் அனுமதிக்க முடி யாது என்றும் கண்டிப்புடன் கூறியுள்ளார்.

இதற்கு மறுப்பு தெரிவித்த மாணவிகள் பள்ளியிலிருந்து வெளியேறி விட்டனர். இவர்கள் தங்கள் பெற்றோர் அல்லது காப்பாளரை அழைத்து வரும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த பிரச்சினை கான்பூர் மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளது. இதனால், இப்பிரச் சினையில் கான்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பிலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இது குறித்து பில்ஹர் பகுதி வட் டாட்சியரான ராஷ்மி லாம்பா கூறும் போது, ‘‘ஹிஜாப் அல்லது பர்தா அணிந்து வருவதால் பள்ளியின் விதிமுறைகள் மீறப்படுவதாக அதன் நிர்வாகம் கூறியுள்ளது. இதன் பிறகும் அந்த மாணவிகள் சீருடை மட்டும் அணிந்துவர மறுத்துள்ளனர்.

வேண்டுமானால் தமது பெயர்களை பள்ளியிலிருந்து நீக்கிக் கொள்ளும்படியும் கூறிச் சென்று விட்டனர். எனினும், அவர்கள் பெற்றோர் அல்லது காப்பா ளருடன் வந்து முதலமைச்சரை சந்திக்கும் வரைநடவடிக்கை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது’’ எனத் தெரிவித்துள்ளார்.
இதற்குமுன், உபியின் ராம்பூரி லும் இதுபோன்ற பிரச்சினை எழுந்திருந்தது. பிறகு அப்பள்ளியின் முஸ்லிம்மாணவிகளின் பெற்றோரு களுடன் பேசி பிரச்சினை தீர்க்கப்பட்டது. அதேபோல், பில்ஹர் பள்ளியின் முஸ்லிம் மாணவிகளின் பெற்றோர்களிடமும் பேச பள்ளி நிர்வாகம் முயற்சிப்பதாகத் தெரிகிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *