7.8.2024
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* நிதி ஆதாரத்தை பெருக்க வழிவகை சொல்லுங்கள், திட்டக் குழுவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்.
*அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் பதவிக்கு கமலா ஹாரிஸ்; துணை அதிபர் வேட்பாளரை அறிவித்தார் கமலா ஹாரிஸ்!
டெக்கான் கிரானிக்கல்,அய்தராபாத்:
* ராகுல் காந்தி தலைமையில் நாடாளுமன்ற வளாகத்தில் நடந்தது மருத்துவம், ஆயுள் காப்பீடு மீதான ஜிஎஸ்டிக்கு எதிராக போராட்டம்: இந்தியா கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்பு.
* உள்ளாட்சி தேர்தலில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு; முழு தரவுகளையும் அரசு தர வேண்டும், தெலுங்கானா உயர்நீதிமன்றம் உத்தரவு.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* 84 வயதான நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் முகமது யூனுஸ் வங்கதேச இடைக்கால அரசின் தலைவராக நியமிக்கப்பட்டார்.
* எனக்கு ஆளுநர் பதவி தராவிட்டால்? பாஜகவை எச்சரிக்கும் சிவசேனா முன்னாள் எம்.பி.; நவநீத் ராணாவின் ஜாதிச் சான்றிதழ் வழக்கை ஆளுநராக வில்லை எனில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடருவேன் என்கிறார்.
* இந்தியா கூட்டணி தலைவர்கள் இந்த வார இறுதியில் டில்லியில் சந்தித்து பேச உள்ளனர்.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* பெரிய அண்ணன்கள் போல உச்ச நீதிமன்றம் நடந்து கொள்வதா? தங்களது ஆணைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்ததை எதிர்த்து, பஞ்சாப் மற்றும் அரியானா உயர் நீதிமன்ற நீதிபதி விமர்சனம்.
* என்னை மகாராட்டிரா முதலமைச்சராக ஆக்குங்கள்; காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் என் சி பி (எஸ்பி) தலைவர் சரத் பவார் ஆகியோரை சந்தித்து, வலியுறுத்த டில்லி செல்கிறார் உத்தவ் தாக்கரே.
* இப்போது எப்படி முடிந்தது?, நீட் முதுகலை தேர்வு மய்யங்களை ஆந்திராவில் ஒதுக்கிய ஒன்றிய அரசு, எதிர்ப்பு கிளம்பியதும் தமிழ் நாட்டுக்குள்ளேயே இடமாற்றம் செய்து அறிவிப்பு.
தி ஹிந்து:
* பட்டியல் ஜாதியினர் உள் ஒதுக்கீடு: உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து காங்கிரஸ் ஆளும் மாநிலங்களுடன் மல்லிகார்ஜுன கார்கே ஆலோசனை நடத்த முடிவு.
* ஜாதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டில் ‘கிரீமி லேயர்’ அளவுகோலுக்கு கூடாது; ஒய்.எஸ்.ஆர். எம்.பி. கிருஷ்ணய்யா, மாநிலங்களவையில் கோரிக்கை
டைம்ஸ் ஆப் இந்தியா:
* உ.பி. மாடல்: உ.பி. மாநிலம், தர்பா, புலந்த்ஷாஹர் மருத்துவமனை குளிர்சாதனப் பெட்டியில் தடுப்பூசிகள், மருந்துகள் இல்லாமல் பீர் பாட்டில்கள் இருப்பது கண்டுபிடிப்பு. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது
– குடந்தை கருணா