தஞ்சை, ஆக. 7- தஞ்சை காவேரி அன்னை கலைமன்றம் நடத்திய 57ஆம் ஆண்டு நிறைவு மற்றும் 54ஆவது நாடகப் போட்டி விழா, தஞ்சாவூர் அறிஞர் அண்ணா நூற்றாண்டு அரங்கில் வெகு விமர்சையாக கடந்த 12 நாட்களாக (19.7.224 – 30.7.2024) நடைபெற்றது.
தமிழ்நாடு, புதுச்சேரி, கருநாடகா உள்பட மூன்று மாநில நாடகக் குழுவினர்கள் போட்டியில் கலந்து கொண்டனர்.
விழாவில் 23 நாட கங்கள் பங்குபெற்றன.
இவற்றில் தந்தை பெரியார் சுயமரியாதை இயக்க கருத்துமிகுந்த சிறந்த நாடகமாக புதுச்சேரி கலைசித்ரா கலைக்குழுவினர் வழங் கிய ‘குற்றம் குற்றமே’ என்ற நாடகம் தேர்வு செய்யப்பட்டு, தந்தை பெரியார் நினைவுப் பரிசினை சிறந்த நாட கத்துக்கான சிறப்பு பரிசினை பெற்றனர். பரிசினை நாடக இயக்குநர் சுகுணா கலைமணி அவர்களுக்கு பெரியார் விருதாளர் கு.ப.ஜெயராமன் வழங்கிச் சிறப்பித்தார்.
அருகில் நாடகவேள் மா.வீ.முத்து, அழகு.பன்னீர்செல்வம், இரா.செழியன், எஸ்.எஸ்.ராஜ்குமார், ஸ்டெல்லா மதிமிஸ், முரளிதரன், கலை இலக்கியன், யாழினி உள்ளனர்.