மேற்கு வங்கத்தை பிரிக்க முடியாது!

1 Min Read

சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்

கொல்கத்தா, ஆக. 7 மேற்கு வங்கத் தின் வட மாவட்டங்களைப் பிரித்து தனி யூனியன் பிரதேசமாக உருவாக்க வேண்டும் என்று பாஜக தலைவா்கள் பலா் வலியுறுத்தி வருகின்றனா். இதே போல கூச்பிகார் மாவட்டத்தைப் பிரித்து தனி மாநிலமாக உருவாக்க வேண்டும் என்று அக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் அனந்த மகாராஜ் தெரிவித்தார்.
இந்நிலையில், மேற்கு வங்கத்தைப் பிரிக்கும் எந்தவொரு முயற்சிக்கும் எதிர்ப்பு தெரிவித்து மாநில அரசு சார்பில் சட்டப்பேரவையில் தீா்மானம் கொண்டுவரப்பட்டது. இந்தத் தீா்மானம் மீது மாநில முதலமைச்சர் மம்தா 5.8.2024 அன்று பேசுகையில், ‘நாட்டின் சுதந்திரத்துக்கு மேற்கு வங்கம் போராடியுள்ளது. ஒட்டுமொத்த நாட்டுக்கும் மேற்கு வங்கத்தின் பண்பாடும் பாரம்பரியமும் முக்கியம். மேற்கு வங்கத்தை பிரிக்கும் எந்தவொரு முயற்சிக்கும் மாநில அரசு எதிராக உள்ளது’ என்றார்.

மேற்கு வங்கத்தைப் பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை தூண்டியதே பாஜகதான் என்று குற்றஞ் சாட்டப்படுகிறது. எனினும், தீா்மானம் மீதான விவாதத்தில் அந்த மாநிலத்தைப் பிரிப்பதற்கு பாஜக எதிராக உள்ளது என்றும், அதற்குப் பதிலாக மாநிலத்தின், குறிப்பாக வட மாவட்டங்கள் வளா்ச்சி அடையே வேண்டும் என்றும் விரும்புவதாகவும் அக்கட்சி தெரிவித்தது.
இதுதொடா்பாக பாஜகவைச் சோ்ந்தவரும், சட்டப்பேரவை எதிர்க் கட்சித் தலைவருமான சுவேந்து அதிகாரி தீா்மானம் மீதான விவாதத்தில் பேசுகையில், ‘ஒன்றுபட்ட மேற்கு வங்கத்தின் ஒட்டுமொத்த வளா்ச்சியையே பாஜக விரும்புகிறது’ என்றார்
இதையடுத்து அந்தத் தீா்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
மேற்கு வங்கத்தை பிரிக்கும் எந்தவொரு முயற்சிக்கும் எதிர்ப்பு தெரிவித்து, கடந்த ஆண்டு பிப்ரவரியில் இதேபோன்ற தீா்மானம் மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *