டாக்கா, ஆக. 7- வங்காள தேசத்தில் ஹசீனா கட்சி தலைவரின் விடுதிக்கு தீ வைக்கப்பட்டதில் 24பேர் உடல்கருகி பலியாகினர். முன்னாள் கிரிக்கெட் வீரரின் வீடும் தீக்கிரையானது.
வங்காளதேசத்தில் பிரதமர் பதவி விலகல், நாடாளுமன்றம் கலைப்பு, இடைக்கால அரசை அமைப்பதற்கான முயற்சிகள் என அடுத்தடுத்து அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்தாலும் அங்கு வன்முறை முழுமையாக ஓயவில்லை.
தங்கள் ஒரே கோரிக்கை யான ஷேக் ஹசீனாவின் பதவி விலகலுக்கு பிறகும் போராட்டக்காரர்கள் தொடர் வன்முறைகளில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக மேனாள் பிரதமர் ஹசீனாவின் அவாமி லீக் கட்சியின் பிரமுகர்களுக்கு சொந்தமான குடியிருப்புகள், வணிகக்கட் டடங்கள் உள்ளிட்டவற்றின் மீது தாக்கு தல் நடத்தி வருகின்றனர்.
நேற்று முன்தினம் (5.8.2024) இரவு டாக்காவில் உள்ள அவாமி லீக் கட்சியின் பொதுச்செயலாளர் ஷாஹின் சக்லதார் என்பவருக்கு சொந்தமான நட்சத்திர விடுதிக்கு தீ போராட்டக்காரர்கள் வைத்தனர்.
தரைத்தளத்தில் வைக்கப்பட்ட தீ, கண் இமைக்கும் நேரத்தில் அடுத்தடுத்த தளங்களுக்கு பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. இந்த கோர நிகழ்வில் வீடுதியில் இருந்த 24 பேர் தீயில் கருகி பலியாகினர்.
உயிரிழந்தவர்களில் வெளிநாடுகளை சேர்ந்த சிலரும் அடங்குவர் என்றும், விடுதி இடிபாடுகளுக்கு அடியில் இன் னும் சிலர் சிக்கியிருக்கலாம் என அஞ் சப்படுவதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
இதேபோல் வங்காளதேச மேனாள் கிரிக்கெட் வீரரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மஸ்ரபி மோர்தாசாவின் வீட்டுக்கும் போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். அவாமி லீக் சார் பில் போட்டியிட்டு அந்நாட்டு நாடாளு மன்ற உறுப்பினராக தேர்வான இவர், கட்சியின் கொறடாவாக செயல் பட்டு வந்தார். மோர்தாசாவின் வீட்டுக்கு தீ வைக்கப்பட்டபோது எடுத்த புகைப்படங்களை போராட் டக்காரர்களில் ஒருவர் எக்ஸ் தளத்தில் பகிர்ந்த நிலையில், அந்தபுகைப்படங்கள் வைரலாக பரவி வருகின்றன.
தலைநகர் டாக்கா உள்பட நாடு முழுவதும் உள்ள அவாமி லீக் கட்சியின் அலுவலகங்கள், கட்சித் தலைவர்களின் வீடுகள் உள்ளிட்டவற்றை போராட்டக்காரர்கள் சூறையாடியதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக் கின்றன.
டாக்காவில் சற்று அமைதி
இந்த நிகழ்வுகளில் பலர் கொல் லப்பட்டதாக தெரிகிறது. அதே போல் ஒரு சில இடங்களில் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாகவும், இதில் பலர் பலியானதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
அந்த வகையில் ஷேக் ஹசீனாவின் பதவி விலகலுக்கு பிறகு அரங்கேறிய வன்முறைகளில் மட்டும் 100-க்கும் அதிகமானோர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதன் மூலம் அரசுக்கு எதிரான போராட்டங்களில் பலியானோரின் எண்ணிக்கை 440 ஆக உயர்ந்துள்ளது.
அதே சமயம் தலைநகர் டாக்காவில் நேற்று (6.8.2024) நிலைமை சற்று அமைதியாக இருந்தது. பேருந்துகள் மற்றும் பிற பொது போக்குவரத்துகள் வழக்கம் போல் இயங்கின. வியா பாரிகள் கடைகளைத் திறந்தனர். அலு வலகங்களுக்கு அரசு வாகனங்கள் சென்றுகொண்டிருந்தன. பேட்டரியில் இயங்கும் ரிக்ஷாக்கள் சாலைகளில் ஓடின.
பல நாட்களுக்கு பிறகு டாக்காவில் பள்ளி, கல்லூரிகள் நேற்று திறக்கப்பட்டன. எனினும் மாணவர்களின் வருகை குறைவாகவே இருந்ததாக கூறப்படுகிறது.