புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை அருகே உள்ள மோகனூர் கிரமத்தில் தந்தை பெரியார் 145 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா மற்றும் சமூகநீதி நாள் பொதுக்கூட்டம் 3.8.2024 அன்று மாலை 6.00 மணியளவில் கோ.ஆறுமுகம் தலைமையில் நடைப்பெற்றது. மாவட்ட இளைஞரணி தலைவர் கா. காரல்மார்க்ஸ் வரவேற்புரையாற்றினார். திராவிட மாணவர் கழக மாநிலச் செயலளார் இரா.செந்தூரபாண்டியன் கருத்துரை வழங்கினார். இறுதியாக கழக சொற்பொழிவாளர் தேவ.நர்மதா சிறப்புரையாற்றினார். மாவட்டத் தலைவர் மு.அறிவொளி, மாவட்டச் செயலாளர் ப.வீரப்பன், பொதுக்குழு உறுப்பினர் மூ.சேகர், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் ச.குமார், UCPI மாவட்ட குழு உறுப்பினர் க. அம்பிகாபதி, திமுக. ஒன்றிய துணைச் செயலாளர் த. கருப்பையன், மேனாள் ராணுவ வீரர் த. முத்துச்சாமி, மோகனூர் பவுன்ராஜ் மற்றும் தோழர்கள் கலந்து கொண்டனர். தஞ்சை மாவட்ட இளைஞரணிச் செயலாளர் ஆ. பிரகாஷ் நன்றியுரை கூறினார்.
தந்தை பெரியார் 145 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா மற்றும் சமூகநீதி நாள் பொதுக்கூட்டம்
Leave a Comment