கரூர், ஆக. 5- கரூர் மகாதான புரத்தில் தலையில் தேங்காய் உடைத்த 300 பேரில் 60 பேருக்கு மண்டை உடைந்து தையல் போடப் பட்டன
கரூர் மாவட்டம் கிருஷ்ணராய புரம் அடுத்த மேட்டு மகாதானபுரத் தில் உள்ள மகாலட்சுமி கோயிலில் ஆண்டுதோறும் ஆடி 19 அன்று பக்தர்கள் தலையில் தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சி ஆண்டுதோறும் நடைபெற்று வருகின்றன. இந்த ஆண்டு மகாலட்சுமி அம்மன் கோயிலில் தலையில் தேங்காய் உடைக்க பதிவு செய்த 300 பேரில் 60 பேருக்கு மண்டை உடைந்து சிறப்பு மருத்துவ முகாமில் மண்டை உடைந்த பக்தர்கள் தலையில் மஞ்சள் குங்குமம் போடப்பட்டு வந்த பக்தர்கள் தலையை சுத்தம் செய்து மருத்துவர்கள் தையல் போட்டுஅனுப்பி வைத்தனர்.
பொள்ளாச்சியை சேர்ந்த தவ மணி வயது 30 இவருக்கு தேங்காய் உடைத்த உடன் ரத்தம் சொட்ட சொட்ட மருத்துவ முகாமிற்கு வந்து 12 தையில் போடப்பட்டது. தேனியை சேர்ந்த பத்மா வயது 40 இவர் மண்டையை தேய்த் துக் கொண்டு அழுது கொண்டு முகாமிற்கு வந்த இவருக்கு எட்டு தையல்கள் போடப்பட்டன. பெங் களூரை சேர்ந்த வீரராஜ் வயது 55 தேங்காய் உடைத்தவுடன் நிலை தடுமாறிய வரை உடன் இருந்தவர்கள் அழைத்துச் சென்று மருத்துவ முகாமில் அவருக்கு ஆறு தையல்கள் போடப்பட்டன.
கோயில் பூசாரி பெரியசாமி பல்லைக் கடித்துக் கொண்டு வெறித்தனமாக தேங்காய் பக்தர்கள் தலையில் உடைக்கப்பட்ட போது ஆ, ஊ, அய்யோ அம்மா,என்று அலறல் சத்தம் கேட்டன. ஆடி 19 அன்று ஆடி அமாவாசை என்பதால் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. தேங்காய் உடைக்கப்பட்ட பல பக்தர்கள் சாமி குத்தும் என கருதி மஞ்சள் குங்குமம் மட்டும் வைத்து மருத்துவ முகாமிற்கு செல்லாமல் சென்று விட்டனர்.
இதுபோன்று காட்டுமிராண்டித் தனமான, நிகழ்ச்சிகளை நடத்தக் கூடாது என்று திராவிடர் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டமும் நடைபெற்றன. இது போன்ற மூடநம்பிக்கை நிகழ்ச்சிகளை இனி வரும் காலங்களில் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், தடை செய்ய வேண்டும் என கருதுகின்றனர். பக்தி வந்தால் புத்தி போகும் என்பதற்கு இந்த நிகழ்ச்சி ஓர் எடுத்துக்காட்டு. உடல் நலம், மூளை வளர்ச்சி, பாதிக்கக்கூடிய இந்த நிகழ்ச்சியை பல மருத்துவர்கள் எச்சரித்த பிறகும் தொடர்ந்து நடைபெறுவதை தடை செய்ய தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும் என பொதுமக்கள் பலர் எதிர்பார்க்கின்றனர்.