மாண்டி, ஆக.5 உத்தராகண் டில் பெய்த அதிகன மழையால் 17 பேர் பலியாகியுள்ளனர்.
உத்தராகண்டில் கடந்த 31.7.2024 அன்று மேக வெடிப்பு ஏற்பட்டதன் விளைவாக அதீத கனமழை பெய்து வருகிறது. இதனைத் தொடர்ந்து, ஜங்கிள் சட்டி பகுதியில் கேதார்நாத்திற்கு செல்லும் மலையேற்ற பாதையில் 20 முதல் 25 மீட்டர் நீளமுள்ள சாலை மந்தாகினி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டது.
இதனையடுத்து, கேதர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. கேதார்நாத் கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் மலையேற்ற பாதையில் சிக்கித் தவித்து வந்தநிலையில், இதுவரையில் 9,000 பக்தர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
இருப்பினும், 4 நாள்களாக பெய்து வரும் அதீத கனமழை யால் 17 பேர் வரையில் உயிரிழந் துள்ளனர். மேலும், மழை தொடர் பான சம்பவங்களில் 25 பேர் காயமடைந்துள்ளனர்.
இமாச்சல பிரதேச மேக வெடிப்பு
மீட்புப் பணிகளுக்காக தற்காலிக பாலம்
குலு, ஆக.5 மீட்புப் பணிகளுக்காக தற்காலிக பாலம் அமைத்து ராணுவத்துடன், தேசிய பாதுகாப்புப் படை, மாநில பேரிடர் மீட்புப் படை வீரர்கள் தேடுதல் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இமாசலப் பிரதேசத்தில் 3 மாவட்டங்களில் ஜூலை 31ஆம் தேதி மேகவெடிப்பு ஏற்பட்டது. இமாசலின் குல்லு மாவட்டத்திலுள்ள நிர்மாண்ட், சாய்ன்ஞ், மலானா ஆகிய பகுதிகளிலும், மண்டி மாவட்டத் திலுள்ள பதார், சிம்லா மாவட்டத் திலுள்ள ராம்பூர் மண்டலங்களில் மேக வெடிப்பு ஏற்பட்டது.
மேகவெடிப்பால் நேர்ந்த வெள்ளப்பெருக்கில் பலர் சிக்கி யுள்ளதாக மாநில அரசு தெரிவித் துள்ளது. திடீர் வெள்ளத்தில் பாலங்கள், சாலைகள், வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன.
ராணுவ வீரர்கள், தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர், இந்தோ – திபெத் எல்லைக் காவல்படை, ஒன்றிய தொழில்துறை பாதுகாப்பு படை வீரர்கள் என 410 வீரர்கள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். அதிக அளவு வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுவதால், மீட்புப் பணிகளில் தொய்வு நிலை ஏற்பட்டது.