உத்தராகண்ட்டில் பலத்த மழையால்
பக்தர்கள் பரிதவிப்பு: 10,500 பேர் மீட்பு
அரித்துவார், ஆக. 5- உத்தராகண்ட்டில் பலத்த மழையால் ஏற்பட்ட பாதிப்பால் பரிதவித்து வரும் கேதார்நாத் செல் லும் பத்கர்களை மீட்கும் பணி தொடா்ந்து 3-ஆவது நாளாக நேற்று (3.8.2024) நீடித்த நிலையில், இதுவரை மீட்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 10,500-அய் கடந்துள்ளது.
கடந்த 31.8.2024 அன்று இரவு உத்தராகண்ட் மாநி லம் ஜங்கல்சட்டி பகுதியில் ஏற்பட்ட மேகவெடிப்பால் மிக பலத்த மழை பெய்தது. இதனால் அங்குள்ள பல்வேறு இடங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக கேதார்நாத் கோயிலுக்குச் செல்லும் மலைப் பாதை பலத்த சேதமடைந்தது.
இதையடுத்து அங்கு செல்லும் பக்தர்களை மீட்கும் பணி தொடா்ந்து 3-ஆவது நாளாக நீடித்தது. மீட்புப் பணியில் தேசிய பேரிடா் மீட்புப் படை, மாநில பேரிடா் மீட்புப் படை ஆகியவை ஈடுபட் டுள்ள நிலையில், இது வரை 10,500-க்கும் மேற்பட்டவா்கள் மீட்கப் பட்டுள்ளனா்.
மேலும் 1,300 பக்தர்கள்…:
கேதார்நாத், பிம்பலி மற்றும் கவுரிகுன்ட் பகுதிகளில் மேலும் சுமார் 1,300 பேர் சிக்கியுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
லின்சோலியில் ஏற் பட்ட நிலச்சரிவில், உத் தரப் பிரதேச மாநிலம் சஹாரன்பூரைச் சோ்ந்த சுபம் காஷ்யப் என்பவா் உயிரிழந்தார். இந்த பாதிப்பு காரணமாக கேதார்நாத் பயணம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இமாசலில்…:
இமாசல பிரதேசத்தில் மேகவெடிப்பால் பெரு மழை பெய்து பலத்த வெள்ளம் ஏற்பட்டதால் சிம்லா, குலு, மண்டி மாவட்டங்களில் காணா மல் போன 45 பேரை தேடும் பணி தொடா்ந்து நடைபெற்று வருகிறது. ஆளில்லா விமானங்களின் (ட்ரோன்) உதவியுடன் ராணுவம், தேசிய மற்றும் மாநில பேரிடா் மீட்புப் படைகள், இந்தோ-திபெத் எல்லை காவல் படை, ஒன்றிய தொழிலக பாதுகாப்புப் படை, காவல் துறை, ஊா்க்காவல் படையைச் சோ்ந்த 410 போ் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனா்.
ஜார்க்கண்டும் தப்பவில்லை
கடந்த 2 நாள்களாக ஜார்க்கண்டின் பல்வேறு பகுதிகளில் இடைவிடாது பெய்த மழையால் வீடுகள், சாலைகள் சேதமடைந்து, மரங்கள் முறிந்து விழுந்தன. மாநில தலைநகா் ராஞ்சியின் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடா் மீட்புப் படை ஈடுபடுத்தப்பட்டது.
மேற்கு வங்கம்
வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறியதால், மேற்கு வங்க தலைநகா் கொல்கத்தா, எவுரா, உப்பு ஏரி மற்றும் பாரக்பூா் பகுதிகளில் தொடா் மழை பெய்தது.