புதுடில்லி, ஆக. 5- நாடு முழுவதும் ரயில்வே துறையில் காலியாக உள்ள 7,951 பணியிடங் களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.
இரயில்வேயில் மேற்பார்வை யாளர்கள் என 7,934 பணியிடங் கள் காலியாக உள்ளன. மேற்பார்வை யாளர்கள், ஆராய்ச்சி உதவியாளர்கள் என 13 காலியிடங்களுக்கும் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
கல்வித்தகுதி என்ன?
இளநிலை இன்ஜினியர் பணி யிடத்துக்கு டிப்ளமோ அல்லது இன்ஜினியரிங் பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். அய்.டி., மற்றும் கணிப்பொறி பிரிவில் பி.ஜி.டி.சி.ஏ., பி.எஸ்.சி., (கம்யூட்டர் சயின்ஸ்), பி.சி.ஏ/பி.டெக்., முடித்தவர்களும் விண் ணப்பிக்கலாம். சூப்பர்வைசர் பதவிகளுக்கு டிப்ளமோ அல்லது இன்ஜினியரிங் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
மாத ஊதியம்
18 வயது முதல் 36 வயது உள்ளவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். தாழ்த்தப்பட்ட சமூகப் பிரிவினருக்கு வயது வரம்பில் சலுகை அளிக்கப்பட்டு உள்ளது.
பொதுப்பிரிவைச் சேர்ந்தவர் களுக்கு 3 ஆண்டுகளும், பொதுப் பிரிவு மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் வரையும் வயது வரம்பில் சலுகை அறிவிக்கப்பட்டு உள்ளது. ஊதியமாக தொடக்க காலத்தில் குறைந்த பட்சம் ரூ. 35,400 மற்றும் ரூ.44,900 என பணியிடங்களுக்கு ஏற்ற வகையில் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
காலக்கெடு
விண்ணப்பதாரர்கள் இணையம் மூலமாக ஆகஸ்ட் 29ஆம் தேதி வரை விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். இதுதொடர்பான கூடுதல் விவரங்களை https://www.rrbchennai.gov.in/ என்ற இணையதளத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம்.