சென்னை, ஆக. 4- தமிழ்நாட்டில் குடும்ப அட்டை உள்ளவர்களுக்கு தமிழ்நாடு அரசு 4 முக்கியமான அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளது. மிக முக்கியமான சில வாய்ப்புகளை இந்த அறிவிப்புகள் வழங்கி உள்ளன. இருந்த இடத்தில் இருந்தே பல்வேறு மாற்றங்களை செய்யும் அரிய வாய்ப்பை வெளி யிட்டு உள்ளது. அந்த அறிவிப்புகள் என்னென்ன என்று இங்கே வரிசையாக பார்க்கலாம்.
அறிவிப்பு 1: நியாய விலைக் கடைகளில் பாக்கெட் மூலம் பொருட்கள் விநியோகம் செய்யும் நடைமுறை கொண்டு வரப்பட்டு உள்ளது. சோதனை அடிப்படையில் 234 தொகுதிகளில் தலா ஒரு நியாய விலைக் கடையை தேர்வு செய்து தொடங்க திட்டம் போடப்பட்டு உள்ளது. சுத்தத்தை உறுதி செய்யும் வகையிலும், கடைகளில் அரிசி அளவு குறைவதை தடுக்கும் வகை யிலும் இனி பாக்கெட்டில் விற்கும் முறை அமலுக்கு வருகிறது.
முதற்கட்டமாக சேலம் மாவட் டத்தில் ஒரு நியாய விலைக் கடையில் மட்டும் தற்போது உணவுப் பங்கீட்டுப் பொருட்கள் பாக்கெட் மூலம் விற்பனை செய்யப்படுகிறது.
அறிவிப்பு 2: தமிழ்நாடு முழுக்க புதிய குடும்ப அட்டை வழங்கும் பணி தொடங்க உள்ளது. புதிய குடும்ப அட்டைகள் அடுத்த மாதம் முதல் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் காரணமாக புதிய குடும்ப அட்டைகள் வழங்கும் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. புதிதாக குடும்ப அட்டைகள் கேட்டு 2.8 லட்சம் பேர் விண்ணப்பம் செய்துள்ளனர்.
இந்தப் பணிகளை விரைந்து முடிக்க தமிழ்நாடு அரசு நுகர் பொருள் வாணிப கழகம் முடிவு செய்துள்ளது. இதன்படி புதிதாக 2.8 லட்சம் புதிய குடும்ப அட்டைகள் வழங்கும் பணி தொடங்கியுள்ளது. புதிய குடும்ப அட்டை கோரி இதுவரை 2.8 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
அறிவிப்பு 3: குடும்ப அட்டையில் விலாசம் மாற்றுவதற்கான வசதிகளை மாநில அரசு ஏற்படுத்திக் கொடுத்து உள்ளது. இது தொடர்பான முக்கியமான விவரங்களை இணையம் வழியாக வெளியிட்டு உள்ளது.
தமிழ்நாட்டில் குடும்ப அட்டைக ளில் செய்ய வேண்டிய மாற்றங்களை இணையம் வழியாக எளிமையாக செய்ய முடியும். முக்கியமாக விலாசம் மாற்றுவதை இணையம் வழியாக செய்ய முடியும்.
பி
ன்வரும் முறைகளை பயன் படுத்தி இணையம் வழியாக விலாசம் மாற்ற முடியும். தமிழ்நாடு மின் – பொது விநியோக அமைப்பு போர்ட்டலை இதற்கு பார்வையிட வேண்டும்.
https://www.tnpds.gov.in/home.xhtml
வலது புறத்தில் நான் அடுத்து “ஸ்மார்ட் கார்டு சேவைகள்” என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்
பின்னர் நான் முகவரியை மாற்று வதற்கான விருப்பத்தைத் தேர்வு செய்ய வேண்டும்.
எனது புதிய முகவரி தொடர் பான அனைத்து விவரங்களையும் நிரப்ப வேண்டும்- பின் குறியீடு, மாநிலம், பகுதி பெயர் மற்றும் பல என்பதை தெரு செய்ய வேண்டும்.
குடும்ப அட்டையில் உங்கள் அலைபேசி எண் பதிவு செய்யப் பட்டுள்ளதா என்பதை உறுதிப் படுத்திக் கொள்ளுங்கள், இல்லை யெனில் TNEPDS உதவி மய்யத்தை தொடர்பு கொள்ளவும்.
1967, 1800-425-5901 ஆகிய எண் களையும் தொடர்பு கொள்ளலாம்.