3.8.2024
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* உயர்கல்வி மாணவர் சேர்க்கையில் இந்தியாவிலேயே நம்பர் ஒன் தமிழ்நாடுதான். நாட்டின் முதன்மை உயர்கல்வி நிறுவனங்களுக்கு செல்லும் அரசு பள்ளி மாணவர்களின் கல்விச் செலவையும், வெளிநாடு படிக்க செல்லும் மாணவர்களின் முதல் பயணச் செலவையும் அரசே ஏற்றுக்கொள்ளும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
* காப்பீட்டு பிரிமியங்களில் ஜி.எஸ்.டி.18% விதிக்கப் படுவதை நிறுத்துங்கள்: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு மம்தா வேண்டுகோள்.
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* சக்கரவியூக பேச்சு பிடிக்காததால் எனக்கு எதிராக அமலாக்கத்துறை ரெய்டு நடத்த திட்டம்: தேநீர், பிஸ்கட்டுடன் காத்திருப்பதாக ராகுல் டிவிட்
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* ஒன்றிய அரசின் ஒலிபரப்பு மசோதா பேச்சு சுதந்திரத் திற்கு அச்சுறுத்தல் – காங்கிரஸ் எச்சரிக்கை.
* அதிகாரத்துவத்தினர் ஆர்.எஸ்.எஸ்-இல் சேர தடை இல்லை என்ற ஒன்றிய அரசின் முடிவின் மூலம், ஹிந்து ராஷ்டிரா என்ற கருத்தை முறைப்படுத்துவது ஒரு படி மேலே கொண்டு செல்லப்பட்டுள்ளது என்கிறார் கட்டுரையாளர் சுகாஷ் பாலிகர்
* அரசின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில், தமிழ்நாட்டைச் சேர்ந்த திமுக மாநிலங்களவை எம்.பி., முகமது அப்துல்லா, நீட் மற்றும் என்.டி.ஏ., ஆகியவற்றை ரத்து செய்யக் கோரி, மருத்துவ நுழைவுத் தேர்வுகளை நடத்த மாநிலங்களுக்கு அனுமதி அளிக்கும் தனி உறுப்பினர் தீர்மானம், கல்வியை ஒரே நேரத்தில் பட்டியலில் இருந்து நீக்கும் சட்டத்தை முன்மொழிந்தார்.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* வயநாடு நிலச்சரிவு குறித்து மாநிலங்களவையில் தவறான கருத்து தெரிவித்ததற்காக உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு எதிராக ஜெய்ராம் ரமேஷ் சிறப்புரிமை தீர்மானத் தாக்கீதை அளித்தார்.
தி ஹிந்து:
* எஸ்.சி. பிரிவினரில் பலவீனமான பிரிவினருக்கு இட ஒதுக்கீடு சமூக நீதியை மேலும் தீவிரப்படுத்தும் என்கிறது ஹிந்து தலையங்க செய்தி.
தி டெலிகிராப்:
* அமெரிக்காவின் தனிநபர் வருமானத்தில் கால் பங்கை எட்ட இந்தியா 75 ஆண்டுகள் ஆகலாம்: உலக வங்கி அறிக்கை.
* பட்டியலிடப்பட்ட ஜாதிகள், பழங்குடியினரில் கிரீமிலேயர் முறை கொண்டு வரலாம் என்கிற உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் கருத்துக்கு தேஜஸ்வி கடும் எதிர்ப்பு.
டைம்ஸ் ஆப் இந்தியா:
* நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி, இது தமிழ்நாட்டு இளைஞர்களின் கனவை சிதைத்து விட்டது என மக்களவையில் திமுக எம்.பி. ராணி சிறீகுமார் பேச்சு.
– குடந்தை கருணா