புதுடில்லி, ஆக. 3- விடுதலை சிறுத்தைகள் கட்சியின் விழுப்புரம் மக்களவை உறுப்பினர் து.ரவிக்குமார் புதுடில்லி யில் நேற்று (1.8.2024) ரயில்வேத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை சந்தித்தார்.
அப்போது, விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதி யில் ரயில்வே துறை செய்யவேண்டிய பணிகள் குறித்த கடிதத்தை அளித்துள்ளார்.
விழுப்புரம், வளவனூர் ஆகிய இடங்களில் ரயில்வே நிலையங்களையொட்டிப் பல தலைமுறைகளாகக் குடியிருக்கும் மக்களுக்கு மாற்றுக் குடியிருப்பு ஏற்பாடு செய்யாமல் வெளியேற்றக்கூடாது
தேஜாஸ் ரயிலை விழுப்புரத்தில் நிறுத்த வேண்டும்.
விழுப்புரம் ஜங்ஷனில் EMU ரயில் வசதியை ஏற்படுத்த வேண்டும்
ராமேஸ்வரம் எக்ஸ் பிரஸை திருக்கோயிலூரில் நிறுத்த வேண்டும்
உளுந்தூர்பேட்டை, திண்டிவனம், திருக்கோயி லூர் ரயில் நிலையங்களை மேம்படுத்த வேண்டும்
மூத்த குடிமக்களுக்கும், ஊடகவியலாளர்களுக்கும் ரயில் பயணச்சீட்டு கட்டணத்தில் அளிக்கப் பட்டுவந்த சலுகையை மீண்டும் அளிக்கவேண்டும் உள்ளிட்ட 10 கோரிக் கைகளை அக்கடிதத்தில் முன்வைத்துள்ளார்.