திருச்சி, ஆக. 3- திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 45 ஆம் ஆண்டு விளையாட்டு விழா பள்ளி வளாகத்தில் உள்ள அன்னை மணியம்மையார் விளையாட்டு அரங்கத்தில் 02.8.2024 அன்று காலை 8 மணி அளவில் மொழி வாழ்த்துடன் தொடங்கியது.
நிகழ்வில், பன்னாட்டு தடை தாண்டும் ஓட்டப் போட்டி யின் முன்னணி வீரரும், தென்னக இரயில்வேயின், திருச்சி மாவட்ட, தலைமை பயணச்சீட்டு ஆய்வாளருமான, முத்துசாமி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். பள்ளியின் தாளாளர் வீ.அன்புராஜ், பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் உயிரித் தொழில்நுட்பத் துறை பேராசியரும், மாணவர் சேர்க்கை பிரிவின் உதவி இயக் குனநமான டி.கிருஷ்ணகுமாரும், பள்ளி முதல்வர் டாக்டர் க.வனிதாவும் முன்னிலை வகித்தனர். பள்ளியின் 12ஆம் வகுப்பு மாணவி, செல்வி.சி.சுவேதா வரவேற்புரை வழங்கி நிகழ்ச்சிக்கு வந்திருந்தோரை வரவேற்றார்.
தொடர்ந்து பள்ளியின் அனைத்து குழுக்களின் கம்பீரமான அணிவகுப்பு மிகச் சிறப்பான முறையில் நடைபெற்று, பார்ப்போரை வியப்பில் ஆழ்த்தியது. அணி வகுப்பிற்குப் பின்பு மாணவர்கள் அனைவரும் உறுதிமொழி ஏற்றனர். பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர், திருமதி.சவுமியா பள்ளியின் ஆண்டு விளையாட்டு அறிக்கையை வாசித்து. 2023-2024ஆம் கல்வியாண்டில் மாணவர்களின் சாதனைகளைப் பட்டியலிட்டார்.
தொடர்ந்து 1 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான அனைத்து மாணவ,மாணவிகளின் கண்கவர் உடற்பயிற்சிகளும், குழுப் பயிற்சிகளும், மாணவிகளின் கண்கவர் கலைநிகழ்வும், யோகா, சிலம்பம்,டேக்வாண்டோ, பிரமிடு போன்ற சாகசப் பயிற்சிகளும் மிகச் சிறப்பான முறையில் நடைபெற்றது, இந்தப் பயிற்சிகளைக் கண்ட பார்வையாளர்கள் பெருவியப்பில் ஆழ்ந்தனர்.
தொடர்ந்து, விளையாட்டு விழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணித் தோழர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் பரிசுகளும், பதக்கங்களும், சான்றிதழ்களும் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டனர். நிகழ்ச்சியில் பேசிய சிறப்பு விருந்தினர், விளையாட்டின் முக்கியத்துவத்தையும், மாணவர்கள் வாழ்க்கையில் கடை பிடிக்க வேண்டிய ஒழுக்க நெறிமுறைகளையும் பற்றிய அறிவுரைகளைத் தமது உரையின் மூலம் மாணவர்களுக்கு வழங்கியதோடு விளையாட்டுத்துறையில் சிறந்து விளங்கிடும் வீரர்களுக்குக் கொட்டிக் கிடக்கும் வேலைவாய்ப்புகள் குறித் தும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு எடுத்துரைத்தார்.
தொடர்ந்து, ஒட்டுமொத்த வெற்றியாளராக வாகை சூடிய பச்சை மற்றும் ஊதா நிற அணியினருக்குச் சுழற் கோப்பைகள் வழங்கப்பட்டன. நிகழ்வின், பள்ளியின் மாணவத் தலைவி செல்வி.ரௌலா ஃபாத்திமா நன்றியுரை வழங்க, விழா நாட்டுப் பண்ணுடன் வெற்றிகரமாக இனிதே நிறைவுற்றது.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை 45ஆம் ஆண்டு விளை யாட்டு விழாவின் ஒருங்கிணைப்பாளர் கிருபா சங்கர் மற்றும் பள்ளியின் ஆசிரியர்கள், அலுவலக பணித் தோழர்கள் உள் ளிட்ட அனைவரும் மிகச் சிறப்பான முறையில் ஏற்பாடு செய் திருந்தனர் இந்த விழாவில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.