திண்டிவனம்,ஆக.14- திண்டிவனம் திராவிடர் கழகத்தின் சார்பில் வைக்கம் நூற்றாண்டு விழா, கலைஞர் நூற்றாண்டு விழா பச்சைத் தமிழர் காமராசர் 121 ஆவது பிறந்தநாள் விழா மணிப்பூர் பெண்கள் பாலியல் வன்முறையை கண்டித்து திண்டிவனம் நகரத்தில் நான்கு இடங்களில் தெருமுனைக்கூட்டம் நகர தலை வர் உ.பச்சையப்பன் தலைமையில் நடை பெற்றது.
நகர செயலாளர் சு. பன்னீர்செல்வம் அனைவரையும் வரவேற்று பேசினார். மாவட்ட தலைவர் இர. அன்பழகன்,மாவட் செயலாளர் செ. பரந்தாமன்,மாவட்ட அமைப் பாளர் பா.வில்லவன் கோதை, ஒலக்கூர் ஒன்றிய தலைவர் ஏ. பெருமாள், மயிலம் ஒன் றிய செயலாளர் ச. அன்புக்கரசன் ஆகியோர் முன்னிலையேற்று உரையாற்றினர். மாநில இளைஞரணி துணை செயலாளர் தா. தம்பி பிரபாகரன் அறிமுக உரையாற்றினார்.
தலைமை கழக அமைப்பாளர் தா. இளம் பரிதி தொடக்க உரையாற்றினார்.
கழகப் பேச்சாளர் யாழ்திலீபன் தனது உரையில்,
நூறு ஆண்டுகளுக்கு முன்பு கேரள மாநிலம் வைக்கத்தில் நிலவிய ஜாதி இழிவை யும் அதை எதிர்த்து தந்தை பெரியார் நடத்திய போராட்டத்தையும் அதற்காக அவர் சிறை சென்றதையும், அதன் பிறகு அவரது மனைவி நாகம்மையார், சகோதரி கண்ணம்மாள் ஆகியோர் போராட்டத்தை முன்னெடுத்து வெற்றி பெற்றதையும் வரலாற்று தகவல்களாக எடுத்துரைத்தார்.
ராஜாஜி கொண்டு வந்த குலக் கல்வி திட்டத்தை தந்தை பெரியார் எதிர்த்தார் அதுவே ராஜாஜி ஆட்சியை விட்டு விலக காரணமாக அமைந்தது.காமராஜர் ஆட்சிக்கு வரவும் தந்தை பெரியார் தான் காரணமாக இருந்தார். இராஜாஜி கொண்டு வந்த குலக் கல்வி திட்டத்தை பெரியார்,காமராஜர் மூல மாக நீக்கச் செய்தார் 300 நபருக்கு மேல் இருக்கும் ஊராட்சியில் ஊராட்சிக்கு ஒரு தொடக்கப்பள்ளி என்று உருவாக்கினார் காமராஜர். காரணம் பெரியார், காரியம் காம ராஜர் என்றும் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்று தந்தை பெரியார் சொன்னதை சட்டவடிவமாக்கி தந்தை பெரியார் நெஞ்சில் தைத்த முள்ளை அகற்றி அனைத்து ஜாதியினரும் அர்ச்சக ராகலாம் என்று சட்டம் கொண்டு வந்தவர் கலைஞர். அதுமட்டுமல்ல அர்ச்சகர் பயிற்சிப் பள்ளியையும் கொண்டு வந்து அனைத்து ஜாதியினருக்கு பயிற்சி அளிக்க செய்தவர் கலைஞர்.
மணிப்பூரில் நடைபெறும் பாலியல் வன் கொடுமையையும் ஜாதி, மதவாதத்தை தூண்டி விட்டு வேடிக்கை பார்க்கும் மணிப்பூர் மாநில பாஜக அரசையும் டபுள் இன்ஜின் ஆட்சி என்று சொல்லும் ஒன்றிய அரசின் மோடி – அமித்ஷா ஆகியோரைக் கண்டித்து கண்டன உரை நிகழ்த்தினார்.
நிகழ்ச்சியில் மயிலம் ஒன்றிய தலைவர் இரா. பாவேந்தன் இளைஞரணி தோழர் பாபு, ஓவியர் செந்தில், ஆகியோர் கலந்து கொண் டனர்.
இளைஞரணி மாவட்ட செயலாளர்
மு. இரமேஷ் நன்றியுரையாற்றினார்.