கல்வி நிலையங்களில் ஜாதியப் பாகுபாடுகளை அகற்றல் குறித்த நீதிபதி சந்துரு ஆணைய அறிக்கை விளக்க சிறப்புக் கூட்டம்

2 Min Read

ஈரோடு, ஆக. 2- 28.07.2024 அன்று மாலை 6 மணியளவில் ஈரோடு பெரியார் மன்றத்தில் – நீதிபதி சந்துருவின் ஆணைய அறிக்கை விளக்கச் சிறப்புக் கூட்டம் மாவட்ட கழகத் தலைவர் இரா. நற்குணன் தலைமையில் நடைபெற்றது.
அனைவரையும் வரவேற்றும் – கல்வி நிலையங்களில் சாதியப் பாகுபாடு அதற்றுதல் அவசியம் என்ற ஆணையத்தின் நோக்கம் அணைவரும் அறியவேண்டும் என்பதற்காக இக்கூட்டம் கூட்டப்பட்டது என்று தலைமைக் கழக அமைப்பாளர் ஈரோடு த.சண்முகம் கூறினார்.

அதனைத் தொடர்ந்து மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக கொள்கை பரப்புச் செயலா ளர் வந்தியத்தேவன் தனது சிறப்புரையில், “நீதி்பதி சந்துரு தனித்தன்மைமிக்க நீதிபதி, அவர்களைத் தமிழ்நாடு அரசு கல்வி நிலையங்களில் ஜாதிய மோதல் – பாகுபாடுகளைக் களைய ஒரு நபர் ஆணையத்தை அமைத்தது. அவர் திருநெல்வேலி அதனைச்சுற்றியுள்ள பள்ளிகள் ஜாதிய வெறியால் பாதிக்கப் பட்ட சின்னதுரை என்ற மாணவனையும் அவரது குடும்பத்தையும் சந்தித்து தீர விசாரித்து சுமார் 800 பக்கங்கள் கொண்ட அறிக்கையை தமிழ்நாடு முதலமைச்சரிடம் வழங்கினார்.

மாணவர்களிடம், ஆசிரியர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும், சமத்துவமான சூழலை எவ்வாறு உருவாக்க வேண்டும் என்பதற்கான வழிகளை இந்த ஆணையம் சுட்டிக்காட்டியுள்ளது. இச்சூழலில் எச்.ராஜா போன்ற பார்ப்பனர்களும், பி.ஜே.பி அண்ணாமலை, தமிழிசை சவுந்தரராசன், இந்து முன்னனி காடேஸ்வரா சுப்பிரமணி போன்றவர்கள் நீதிபதி சந்துருவின் அறிக்கையை தமிழ்நாடு அரசு ஏற்கக் கூடாது என்று சொல்கிறார்கள் இவர்களின் நோக்கம் ஜாதிய மோதல் நடக்க வேண்டும் என்பதே இவர்களை தமிழ்நாட்டு மக்கள் புறக்கணிக்க வேண்டும்.

நீதிபதி சந்துருவின் அறிக்கையை தமிழ்நாடு அரசு அமுல்படுத்தப்பட வேண்டும். என்று சுமார் 1 மணி 10 நிமிடம் சிறப் பான விளக்கவுரை ஆற்றினார்.
கூட்டத்தில் பெரியார் படிப்பக வாசகர் வட்ட தலைவர் கனிமொழி நடராசன், ஆதித்தமிழர் பேரவை வீரவேந்தன், மனித நேய மக்கள் கட்சி சித்திக் ஆகியோர் கலந்து கொண்டு கருத்துரையாற்றினார்கள். நிகழ்வில் மாநகர தலைவர் கோ. திருநாவுக்கரசு, மாவட்ட சு.ம. திருமண அமைப்பாளர் ப.சத்தியமூர்த்தி, மாவட்ட செயலாளர் மா.மணிமாறன், ராஜேந்திர பிரபு, நத்தக்காடையூர் சின்னத்தம்பி, சதிஸ்குமார், ம.தி.மு.க முசிறிரவி ஆகியோர் கலந்து கொண்டனர். திரளான பொது மக்களும் கலந்து கொண்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *