மக்களவையில் கனிமொழி கருணாநிதி எம்.பி., ஆவேசம்
புதுடில்லி, ஆக.2- ஜாதி தெரியாதவர்களை இழிவு படுத்துபவர்கள் உருவாக்கும் பாடத்திட்டத்தை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று மக்களவையில் கனிமொழி ஆவேசமாக கூறினார்.
நாடாளுமன்ற மக்களவையில் நேற்று (1.8.2024) கல்வித்துறை மானி யக்கோரிக்கை விவாதத்தில் தி.மு.க. உறுப்பினர் கனிமொழி தமிழில் பேசியதாவது:-
பா.ஜனதாவின் 2014ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கை யில் கல்வியில் முதலீடுசெய்து பலன் பெறுவது பற்றி சொல்லப்பட்டது.
ஆனால் முதலீடு எப்போது செய்யப்படும்? என காத்துக் கொண் டிருக்கிறோம்.
இந்த பட்ஜெட்டில் கல்விக்காக 2.5 சதவீதம் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது.
கல்வியை பொதுப்பட்டியலில் வைத்து அது அவர்களுக்கு மட் டுமே கொடுக்கப்பட்ட உரிமை என ஒன்றிய அரசு நடந்து கொள் கிறது. ஜி.எஸ்.டி. என்ற பெயரில் அதிக நிதியை எங்களிடமிருந்து வாங்கிக்கொள்கிறீர்கள். ஆனால் கல்விக்கான நிதியை வழங்க மறுக்கிறீர்கள். ‘அட்சயப் பாத்தி ரத்தை’ பிடுங்கிக்கொண்டு ‘பிச்சைப் பாத்திரத்தை’ எங்களிடம் வழங்கிய கதையாக இது இருக்கிறது.
‘சமக்ரா சிக்சா அபியான்’ திட்டத்தில் தமிழ்நாட்டுக்கான முதல் தவணை நிதி ரூ.500 கோடி இன்னும் வழங்கப்படவில்லை. புதிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு முதலமைச்சர் ஏற்றுக் கொள்ளாததால் அதனை தர மறுத்துக் கொண்டு இருக்கிறீர்கள். உங்கள் பிரதமர் குஜராத்தில், முதலமைச்சராக இருந்த போது மாநில உரிமைகளுக்காக குரல் கொடுத்தார். ஆனால் தற்போது பிரதமர் ஆனவுடன் மாநிலங்களின் உரிமைகளை பறிக்கிறவராக இருக்கிறார். தமிழ்நாட்டில் கல்லூரி கள், அரசு மருத்துவக் கல்லூரிகளை கலைஞர் கொண்டு வந்தார். நீங்கள் நீட் தேர்வு மூலம் மாணவர்களின் கனவை சிதைத்துக்கொண்டு இருக்கிறீர்கள்.
பாடத்திட்டத்தில் உங்கள் அரசியல் வரலாறு முகலாயர்களை சொல்லாது. காந்தியார் கொல்லப்பட்டது பற்றி சொல்லாது. பெரியார் உள் ளிட்ட தமிழ்நாட்டு தலைவர்களைப் பற்றி பேசாது. ஆனால் அந்தமான் சிறையில் இருந்து ஏதோ ஒரு பறவை மூலம் தப்பித்து வந்தவரை பற்றி சொல்லும். இதையா நாங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்?.
இறுதியாக இந்த அவையிலே வருத்தத்தோடு ஒன்றை பதிவு செய்கிறேன். இந்த அவையில் ஒருவரின் ஜாதியை மற்றொரு உறுப்பினர் கேட்டிருக்கிறார்.
ஜாதியை தெரிந்து கொள்வதில் என்ன பெருமை இருக்கிறது? என்று எனக்கு தெரியவில்லை.
ஜாதியற்றவர்களாக வாழ்வதில் தான் பெருமை இருக்கிறது என் பதுதான் திராவிட இயக்கத்தின் கொள்கை. இதைவிட வருத் தப்படக்கூடிய விஷயம் என்ன வென்றால் அந்த பேச்சை ஆதரித்து, பாராட்டி இந்த நாட்டின் பிரதமர் பேசுகிறார். ஜாதி என்பதை பெருமை என்று சொல்லும் ஒரு ஆட்சி, ஜாதி தெரியாதவர்கள் இழிவுபடுத்தப்படுவதை ஏற்றுக் கொள்ளும் ஒரு பிரதமர் உருவாக் கும் ஒரு பாடத்திட்டத்தை தமிழ்நாடு எந்த காலத்திலும் ஏற்றுக் கொள்ளாது. எங்கள் முதலமைச்சர் அதற்காக கடைசி வரை போராடுவார். நாங்களும் போராடுவோம். இவ்வாறு அவர் பேசினார்.