புதுடில்லி, ஆக. 1- ஒன்றிய அரசு ஊழியர்களுக்கான ஊதி யத்தை மாற்றி அமைக்க 8ஆவது ஊதியக்குழு அமைக்கும் திட்டம் பரிசீலனையில் இல்லை என்று மாநிலங்களவையில் ஒன்றிய அமைச் சர் கூறினார்.
ஒன்றிய அரசு ஊழியர்களின் ஊதியத்தை மாற்றி அமைக்க பரிந்துரை வழங்கும் ஊதியக்குழு, 10 ஆண்டுகளுக்கு ஒருதடவை அமைக்கப்படுகிறது. கடந்த 7ஆவது ஊதியக்குழு, 2014ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அமைக்கப்பட்டது. அதன் பரிந்துரைகள், 2016ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டன.
அதன்படி, 8ஆவது ஊதியக் குழு பரிந்துரைகள் 2026ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட வேண்டும்.
எனவே, மாநிலங்களவை கேள்வி நேரத்தில், 8ஆவது ஊதியக்குழு பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ஒன்றிய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி பதில் அளித்தார். அவர் கூறியதாவது:-
8ஆவது ஊதியக்குழு அமைக்கக் கோரி கடந்த ஜூன் மாதம் 2 மனுக்கள் பெறப்பட்டன. இருப் பினும், 8ஆவது ஊதியக் குழு அமைக்கும் திட்டம் எதுவும் தற்போது பரிசீலனையில் இல்லை
-இவ்வாறு அவர் கூறினார்.
ஜிகா வைரஸ்
மற்றொரு கேள்விக்கு அனுப்ரியா படேல் அளித்த பதில் வருமாறு:-
நடப்பாண்டில் கடந்த 22ஆம் தேதி வரை 13 பேர் ‘ஜிகா வைரஸ்’ தொற்றால் பாதிக்கப்பட்டனர். இவர்களில் கருநாடகாவில் 3 பேருக்கும், மராட்டியத்தில் 10 பேருக்கும் பாதிப்பு ஏற்பட்டது. கடந்த 2021ஆம் ஆண்டு 234 பேர் பாதிக்கப்பட்டனர்.
-இவ்வாறு அவர் கூறினார்.
இன்னொரு கேள்விக்கு அனுப்ரியா படேல் அளித்த பதில் வருமாறு:-
இருமல் மருந்தால் யாரும் பலியாவது இல்லை. இருப்பினும், கடந்த காலங்களில் இருமல் மருந்தில் மாசுக்கள் கலந்ததால் குழந்தைகள் உயிரிழந்த நிகழ்வுகள் அங்கொன்றும், இங்கொன்றுமாக நடந்துள்ளன.
-இவ்வாறு அவர் கூறினார்.
மாநிலங்களவை கேள்வி நேரத்தில் ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டா கூறிய தாவது:-
நிபா வைரஸ் கோவிட்-19 போன்ற பெருந்தொற்றுகள், விலங்குகளிடம் இருந்து உருவாகி மனிதர்களுக்கு பரவின. உருவாகி வரும் நோய்களை கட்டுப்படுத்த மனிதன், விலங்கு, சுற்றுச்சூழல் ஆகியவற்றை ஒருங்கிணைக்கக்கூடிய ஒரே மருத்துவ அணுகுமுறை அவசியம்.
-இவ்வாறு அவர் கூறினார்.