ஏழுமலையானுக்கே பட்டை நாமமா?

2 Min Read

திருப்பதியில் ரூ.100 கோடி உண்டியல் காணிக்கையை சுருட்டியவர் 2 ஆண்டுக்கு பின் வெளிவந்த மோசடி

திருப்பதி, ஆக.1- திருப்பதி ஏழு மலையான் கோயில் உண்டியல் காணிக்கையில் பக்தர்கள் செலுத்திய வெளிநாட்டு கரன்சிகளை திருடிய தமிழகத்தை சேர்ந்தவர், ரூ.100 கோடி அளவிற்கு சொத்து சேர்த்துள்ளார். இந்த விவகாரம் 2 ஆண்டுகளுக்கு பிறகு வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு தினசரி லட்சக் கணக்கான மக்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். கோயிலுக்கு வரும் பக்தர்கள் செலுத்தும் காணிக்கைகள் மட்டும் தினமும் கோடிக்கணக்கில் வருவதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் இருந்த ஒருவர் ரூ.100 கோடி அளவிற்கு மோசடி செய்த சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

தமிழ்நாட்டைச் சேர்ந்த ரவிக்குமார் என்பவர், திருமலை பெரிய ஜீயர் மடத்தில் வேலை செய்து வந்தார். அதன் வாயிலாக ஏற்பட்ட பழக்கத்தின் அடிப்படையில், அவரை சுமார் 20 ஆண்டுகளாக காணிக்கை பணம் கணக்கிடும் ஊழியர்களில் ஒருவராக தேவஸ்தான நிர்வாகம் நியமித்தது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, காணிக்கை பணம் எண்ணும் பகுதியில் இருந்து வெளியே வந்தபோது அவரின் நடவடிக்கையை கண்காணித்த தேவஸ்தான விஜிலென்ஸ் துறை யினர் தீவிர சோதனைக்கு உட் படுத்தினர்.

ரூ.100 கோடி சொத்து
அப்போது அவர் தன்னுடைய மலக்குடலில் அமெரிக்க டாலர்கள் உள்ளிட்ட வெளிநாட்டு கரன்சிகளை கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். தேவஸ்தானம் அளித்த புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து ரவிக்குமாரை கைது செய்தனர்.
விசாரணையில், பல ஆண்டு களாக திருப்பதி ஏழுமலையானுக்கு காணிக்கையாக கிடைக்கும் வெளிநாட்டு கரன்சிகளை திருடியதை ஒப்புக்கொண்ட ரவிக்குமார், அந்த பணத்தை பயன்படுத்தி சுமார் ரூ.100 கோடி அளவிற்கு தங்க நகைகள், அடுக்குமாடி குடியிருப்புகள், மாந்தோப்பு, தென்னந்தோப்பு என பல சொத்துகளை வாங்கி குவித்ததாகவும் கூறியுள்ளார்.

நன்கொடை
இந்த விவகாரம் வெளியே தெரிந்தால் பக்தர்களின் நம்பிக்கை கெட்டுவிடும் என்பதால், தேவஸ்தானம், லோக் அதாலத்திற்கு இந்த விஷயத்தை கொண்டு சென்றது. அப்போது, திருடிய காணிக்கை பணத்தை கொண்டு வாங்கிய சொத்துகளின் ஒரு பகுதியை ரவிக்குமார், தேவஸ்தானத்திற்கு நன்கொடையாக கொடுப்பதுபோல் எழுதி வாங்கியுள்ளனர். இதற்கு தேவஸ்தான அறங்காவலர் குழுவும் ஒப்புதல் அளித்துள்ளது.
இவ்வளவு நாள்கள் வெளியே தெரியாமல் இருந்த இந்த விவகாரம் பற்றி ஆந்திர சட்ட மேல்சபை உறுப்பினர் ஒருவர், மாநில அற நிலையத்துறை அமைச்சர் ஆனம் விவேகானந்தனிடம் புகார் அளித் திருந்தார். இதையடுத்து ஆந்திர சட்ட மேல்சபையில் அமைச்சர் இந்த முறைகேடு குறித்து பேசியதைத் தொடர்ந்து, வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *