4.8.2024 அன்று கும்பகோணத்தில் திராவிடர் கழகப் பொதுக்குழு மற்றும் தீர்மான விளக்கக் பொதுக்கூட்டம்; சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா, இராஜகிரி கோ.தங்கராசு நூற்றாண்டு விழா ஆகியவற்றை நடத்திட ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை க.அன்பழகன் அவர்கள் திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார், குடந்தை மாவட்ட கழக தலைவர் வழக்குரைஞர் கு.நிம்மதி, தலைமைக் கழக அமைப்பாளர் க.குருசாமி,குடந்தை மாவட்ட செயலாளர் சு.துரைராஜ், குடந்தை மாநகரத் தலைவர் வழக்குரைஞர் இரமேஷ், மாவட்ட தொழிலாளர் அணி தலைவர் ஜில்ராஜ் ஆகியோரிடம் தமிழ்நாடு முழுவதிலிருந்தும் கழகப் பொதுக் குழு கூட்டத்திற்கு வருகை தரும் 1000 கழகத் தோழர்களுக்கு மதிய உணவு அளிப்பதற்கு ரூ.1,50,000த்தை தனது சொந்தப் பொறுப்பில் ஏற்பாடு செய்து தருவதாக மகிழ்வுடன் தெரிவித்தார். கலைஞர் நூற்றாண்டு மலரை மகிழ்வுடன் வழங்கி சிறப்பித்தார் – நன்றி தெரிவித்து தோழர்கள் விடை பெற்றனர். (30.07.2024)
குடந்தை துணை மேயர் சுப.தமிழழகன் ரூ.1,00,000 நன்கொடை வழங்கினார்
ஆகஸ்ட் 4 கும்பகோணத்தில் – திராவிடர் கழகப் பொதுக்குழு மற்றும் தீர்மான விளக்க பொதுக்கூட்டம், சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா, இராஜகிரி கோ.தங்கராசு நூற்றாண்டு விழாவிற்காக, கும்பகோணம் மாநகராட்சி துணை மேயர் சுப.தமிழழகன் அவர்கள் ரூ1,00,000 நன்கொடையை திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார், குடந்தை மாவட்ட கழக தலைவர் வழக்குரைஞர் கு.நிம்மதி, தலைமைக் கழக அமைப்பாளர் க.குருசாமி,குடந்தை மாவட்ட செயலாளர் சு.துரைராஜ், குடந்தை மாநகரத் தலைவர் வழக்குரைஞர் பீ.இரமேஷ், மாவட்ட தொழிலாளர் அணி தலைவர் ஜில்ராஜ் ஆகியோரிடம் வழங்கினார். உடன்: கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை க.அன்பழகன், குடந்தை கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் ஜெ. சுதாகர் (31-07-2024).