இதிலும் அரசியலா? ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையில் அயோத்தி புறக்கணிப்பு மக்களவையில் பைசாபாத் எம்பி அவதேஷ் பிரசாத் புகார்!

2 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

புதுடில்லி, ஜூலை 31 ஒன்றிய அரசின் பொது பட்ஜெட்டில் அயோத்தி புறக்கணிக்கப்பட்டுள்ளதாக மக்கள வையில் பைசாபாத் தொகுதி சமாஜ்வாதி எம்.பி. அவ்தேஷ் பிரசாத் புகார் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் உத்தரப்பிரதேச மாநிலம் பைசா பாத் தொகுதி சமாஜ்வாதி எம்.பி. அவ்தேஷ் பிரசாத் பேசியதாவது:
ஒன்றிய நிதி அமைச்சர் தாக்கல்செய்த பட்ஜெட்டை, நான் லென்ஸ் மூல மாகவும் பலமுறை படித்தேன். இதில் அயோத்தி என்ற பெயர்கூடத் தென்படவில்லை. அயோத்தியின் பெயரில் பாஜக அரசியல் செய்து ஆதாயம் பெற்றுள்ளது. அயோத்தியை உள்ளடக்கிய பைசாபாத் தொகுதி பொதுத் தொகுதியாக இருப்பினும் அங்கு தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த என்னை அகிலேஷ் யாதவ் போட்டியிட வைத்தார். அங்கு நான் வெற்றி பெற்றதால் அயோத்திக்கு எந்தத் தொகையும் பாஜக அரசு ஒதுக்கவில்லை. அயோத்தி புறக்கணிக்கப்பட்டுள்ளது. எனக்குக் கிடைத்த வெற்றியால் அயோத்திவாசிகள் தண்டிக்கப்பட்டு உள்ளனர். உ.பி. அரசால், பொதுமக்களின் குடியிருப்புகள் இடிக்கப்பட்டுள்ளன. சுமார் மூன்று தலைமுறையாக இருந்த வீடும் இடிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு இடிக்கப்பட்டதில் மூன்று உயிரிழப்பும் ஏற்பட்டுள்ளது.

இங்குள்ள நிஷாத் காலனி குடியி ருப்புகள் இடிக்கப்பட்டு, அங்கு கடைகள் கட்டப்பட்டுள்ளன. இவை பெரும் பணக்காரர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. ராமர் கோயில் கட்டுமானத்தின்போது நில பேர ஊழலும் அயோத்தியில் நடைபெற்றுள்ளது. வெறும் ரூ.2 கோடிக்கு வாங்கிய சிறிய நிலம், அடுத்த இரண்டு மணி நேரத்தில் ரூ.18 கோடிக்கு விற்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற ஊழல்களை விசாரிக்க குழு அமைப்பது அவசியம். 2027 சட்டப்பேரவை தேர்தலில் உ.பி.யிலிருந்து பாஜக வெளியேற்றப்படும். 2029-ல் நாட்டின் ஆட்சியிலிருந்தும் விலக்கி வைக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
அயோத்தியில் கடந்த ஜனவரி 22 இல் ராமன் கோயில் திறக்கப்பட்டது. இதற்கான பலன் மக்களவைத் தேர்தலில் கிடைக்கும் என பாஜக எதிர்பார்த்தது. ஆனால், உ.பி.யின் 80 தொகுதிகளில் 2019 தேர்தலில் 62 இடங்களில் வெற்றி பெற்ற பாஜக இம்முறை 33 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. மேலும் அயோத்தியை உள்ளடக்கிய பைசாபாத் தொகுதியில் தோல்வி அடைந்தது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *