ஹிந்தியை திணிக்கவே 3 சட்டங்களின் பெயர் மாற்றம்: மாணிக்கம் தாகூர்

2 Min Read

மதுரை, ஆக 15- “ஹிந்தியை திணிக்கவே 3 சட்டங்களை பெயர் மாற்றி பிரதமரும், அமித்ஷாவும் அறிமுகப்படுத்தியுள்ளனர்” என விருதுநகர் தொகுதி காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் மாணிக்கம் தாகூர் குற்றஞ்சாட்டினார்.

இது தொடர்பாக மதுரை திருநகரில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஏமாற்றம் அளித்தது. மணிப்பூர் பிரச்சினை பற்றி மோடி நாடாளு மன்றத்தில் பேச வேண்டும் என் பது தான் ‘இந்தியா’ கூட்டணியின் கோரிக்கை. ஆனால் அவர் பிரத மரைப் போல் இன்றி பாஜக கட்சித் தலைவராக பேசினார். ராகுல் காந்தியின் பேச்சை நாடா ளுமன்றத்தில் பதிவிடாமல் கூச்ச லிடுவதுதான் பாஜகவின் ஜன நாயகம். எதிர்க்கட்சித் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரியை இடை நீக்கம் செய்திருப்பது 75 ஆண்டு கால நாடாளுமன்ற வரலாற்றில் நடக்காதது.

நாடாளுமன்றம் ‘மன்கி பாத்’ மன்றமாக மாறியது. ஹிந்தியை திணிக்கும் வகையில் 3 சட்டங்க ளையும் ஹிந்தியில் பெயர் மாற்றி அறிமுகம் செய்து, பிரதமரும் அமித்ஷாவும் ஒரு தலைப்பட்சமாக செயல்படுவது தொடர்கிறது.

நீட் விவகாரத்தில் தமிழ்நாடு ஆளுநர் பேசியிருப்பது அகங்காரத் தின் உச்சம். பாஜக தலைவரை போன்று பேசும் ஆளுநரின் செயல் கண்டிக்கத்தக்கது. இபிஎஸ் கூறியிருப்பதைப் போல, நாடாளுமன் றம் நடந்தால் தான் பேச முடியும். நாங்குநேரியில் நடந்ததை கூட அருகில் இருப்பவரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளும் நிலையில் இருக்கிறார் எடப்பாடி. நாடாளு மன்றம் நடக்கவில்லை என, அவ ருக்கு யாராவது சொல்ல வேண் டும்.

டிகே.சிவக்குமார் அமைச்ச ரான பிறகு தண்ணீர் இருந்தால் கொடுப்போம். இல்லையெனில் கொடுக்க மாட்டோம் என, கூறியிருப்பது தவறு. இதை கண்டிக்கி றோம். அங்கு யார் ஆட்சியாக இருந்தாலும், சேர்ந்து முடிவெடுக் கின் றனர். தமிழ்நாட்டில் மட்டும் தான் ஆட்சி பார்த்து பேசும் நிலை யில் இருக்கிறோம். காங்கிரஸ் கட்சி காவிரி விவகாரத்தில் 100 சதவீதம் தமிழ்நாடு அரசின் நிலை யில் நிற்போம். முதலமைச்சர் இதற்காக என்ன சொல்கிறாரோ காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப் பினர்கள் செய்வோம். 

மதுரை, விருதுநகரில் பயணம் செய்த அண்ணாமலை மதுரை எய்ம்ஸ், கப்பலூர் டோல்கேட், மதுரை விமான நிலைய 24 மணி நேர சேவை குறித்து எதுவும் பேசவில்லை. நாடாளுமன்ற உறுப் பினர்களாகிய நாங்கள் என்ன செய்யவேண்டும் என எங்களிடம் சொல்வதைக் காட்டிலும், அவர் பிரதமர் , ஒன்றிய அமைச்சர்கள் என்ன செய்யவேண்டும் என, அவர்களிடம் சொல்லவேண்டும். 

எங்களது தொகுதிக்கான பிரச் சினைகளை குறித்து பேசாத அண்ணாமலைக்கு எங்களைக் கேள்வி கேட்க அருகதை இல்லை. மதுரை விமான நிலைய விரிவாக்கத் துக்கான நிலங்கள் ஒப்படைக்கப் பட்டுள்ளன. ஆறு ஏக்கர் நீர்நிலை நிலம் மட்டும் மிஞ்சி உள்ளது. சுற்றுச்சுவர் பணி நடக்கிறது. பிற வேலை முடிவதற்குள் நிலங்கள் ஒப்படைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *