மேட்டூர், ஜூலை30– ‘நீட் ‘தேர்வை ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி மாபெரும் இருசக்கர வாகனப்பரப்புரை பயணம் செய்து தாராபுரத்திலிருந்து சேலம் மாவட்ட எல்லையை வந்து அடைந்த நான்காம் குழுவிற்கு சங்ககிரி-புதிய இடைப்பாடி சாலையில் 14-7-2024 ஞாயிற்றுக்கிழமை காலை 11:30 மணியளவில் சேலம் மாவட்ட, மேட்டூர் கழக மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் மிகச் சிறப்பான வரவேற்பை அளித்தது.
சேலம் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் வீரமணி ராஜு தலைமையில் செயலாளர் சி. மதியழகன் வரவேற்புரை ஆற்ற, மேட்டூர் மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் கிருட்டிண மூர்த்தி, கழக தலைமை கழக அமைப்பாளர் கா.நா. பாலு, மேட்டூர் கழக மாவட்ட செயலாளர் ப.கலைவாணன், பொதுக் குழு உறுப்பினர் பெ. சவுந்தர ராஜன், பொதுக்குழு உறுப்பினர் க.கமலம் ஆகியோர் முன்னிலை வகிக்க, மேட்டூர் கழக மாவட்ட காப்பாளர் சி.சுப்பிரமணியம் வாழ்த் துரை வழங்கினார்.
கழக பேச்சாளர் தர்மபுரி யாழ்திலீபன் சிறப்புரை ஆற்றினார். ஆங்காங்கு நின்றிருந்த மக்கள் ஆர்வமாக கூடி ஒன்றிய அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர்.
பயணக் குழுவில் வந்திருந்த தோழர்கள் அனைவருக்கும் இடைப்பாடி கோவி அன்புமதி தலைவர் மேட்டூர் கழக மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் அவர்கள் பயனடை அணி வித்தும், வழக்குரைஞர் சுரேஷ்குமார், செயலாளர் சேலம் மாவட்ட பகுத்தறி வாளர் கழகம் குளிர்பானம், குடிநீர் வழங்கியும் வரவேற்றனர்.
இந்நிகழ்வில், சண்முக சுந்தரம் – எடப்பாடி நகர கழக துணைத் தலைவர், இரா.புகழேந்தி சேலம் – பகுத்தறிவாளர் கழகம், சு.இமயவரம்பன் – அம்மாபேட்டை பகுதி கழக செயலாளர், மணிமாறன், அஸ்தம்பட்டி பகுதி செயலாளர், கழக வழக் குரைஞர் சு.செல்வகுமார் அமைப்பாளர் மாவட்ட வழக்குரைஞர் அணி, வெங்கடேசன் – வெள் ளாறு, அ.ராஜேந்திரன் வெள்ளாறு ஒன்றியம், கபிலன் – மேட்டூர் கழக மாவட்ட இளைஞரணி, உல.கென்னடி – சின்னப்பம் பட்டு ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
நிகழ்ச்சியின் முடிவில் சேலம் மாநகர பகுத்தறிவாளர் கழக செயலாளர் வழக்குரைஞர் கோ. கல்பனா நன்றியுரை வழங்கி நிறைவு செய்தார்.