டெக்கான் கிரானிக்கல், சென்னை
*நாம் செய்ய வேண்டிய பணிகள் பல உள்ளன என்றாலும், உடனே செய்ய வேண்டியது ஒன்றிய அரசு ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவதை உறுதி செய்வதுதான். – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
*வரி பயங்கரவாதத்தை ஏவி நடுத்தர மக்கள் முதுகில் குத்திய மோடி அரசு: பாஜகவின் சக்கர வியூகத்தை எதிர்க்கட்சிகள் தகர்க்கும்; மக்களவையில் ராகுல் காந்தி ஆவேச பேச்சு. மேலும், பாஜகவின் சக்கர வியூகத்தை இந்தியா கூட்டணி உடைத்து, விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான சட்டப்பூர்வ அங்கீகாரத்தையும், ஜாதிவாரி கணக் கெடுப்பையும் உறுதி செய்யும் என அனல் தெறிக்க கூறினார்.
*ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு பொருளாதாரம் குறித்து எதுவும் தெரியாது; பிரதமர் மோடி உடனே அவரை நீக்க வேண்டும் என்கிறார் கருநாடக முதலமைச்சர் சித்தராமைய்யா.
*2024 பொதுத் தேர்தலில் வாக்களித்த எண்ணிக் கைக்கும், எண்ணப்பட்ட வாக்குகளுக்கும் பெரிய இடைவெளி உள்ளது என ஏடிஆர் அமைப்பு புகார்.
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்
கூட்டாட்சி தத்துவத்தை நினைவில் கொண்டு ஆளுநர்கள் செயல்பட வேண்டும் என்கிறது தலையங்க செய்தி.
கூட்டணி ஆட்சியை கொண்டு செல்வதில் பிரதமர் மோடிக்கு உள்ள சிரமங்கள் தெரிகிறது என்கிறார் பத்திரிகையாளர் ஷிகா முகர்ஜி.
இந்தியன் எக்ஸ்பிரஸ்
நீட் தேர்வை ரத்து செய்து, உயர்நிலை மதிப் பெண்களின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை முறையை உருவாக்க மாநில அரசுகளை அனுமதிக்க வேண்டும், ஜோதிமணி எம்.பி. மக்களவையில் பேச்சு.
அயோத்தி நில மோசடி குறித்து விசாரணை நடத்த வேண்டும்: சமாஜ்வாடி வலியுறுத்தல்
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: ‘ஜீரணிக்க முடியவில்லை’. துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் பின்னணியில் உள்ள உண்மையை வெளி கொண்டு வருவதில் சிபிஅய் “அதிர்ச்சியூட்டும் வகையில் தோல்வியடைந்தது” என்று குற்றம் சாட்டிய நீதிமன்றம், ஒன்றிய அமைப்பின் விசாரணை அறிக்கையை “நம்பத்தகாதது” மற்றும் “நம்பகமற்றது” என்றும் நீதிபதிகள் காட்டம்.
தி இந்து
டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதி மன்றக் காவலில் உடல்நலக் குறைவு குறித்து டில்லி ஜந்தர் மந்தரில் நடைபெறும் இந்திய கூட்டணி பேரணியில் காங்கிரஸ், சமாஜ்வாதி மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் பங்கேற்கும் என ஆம் ஆத்மி கட்சியின் ராஜ்யசபா எம்.பி. சஞ்சய் சிங் தெரிவித்தார்.
தி டெலிகிராப்
பீகார் 65% இடஒதுக்கீடு வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரிக்கும். ஆனால், உயர்நீதிமன்ற தடையை நீக்க மறுப்பு.
மதுவிலக்கு உள்ள குஜராத்தில், காவல் துறையினர் கைதிகளை அழைத்துச் செல்லும்போது மது வேகமாக பாய்கிறது.
டைம்ஸ் ஆப் இந்தியா
எய்ம்ஸ் மருத்துவமனை முதுகலை பட்டப் படிப்பிற்கான தேர்வில் 10,721 ரேங்க் பெற்ற மாணவருக்கு இடம்; 287 ரேங்க் பெற்ற மாணவர் தனக்கு இடம் கிடைக்கவில்லை; உச்ச நீதிமன்ற தீர்ப்பையும் மீறி, எய்ம்ஸ் மாணவருக்கு முன்னுரிமை திட்டத்தால் நடந்த விபரீதம்.
அரசு சாரா வேலையில் இருப்பவர் காலமுறை ஊதிய உயர்வு அல்லது ஆண்டுக்கான ஊதிய உயர்வுகளைப் பெறுபவர்களை நிரந்தர ஊழியராகக் கருதலாம் என மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றம் தீர்ப்பு.
– குடந்தை கருணா‑