செங்கல்பட்டு, ஜூலை 30- செங்கல்பட்டு மாவட்டத்தில் ‘நீட்’ எதிர்ப்புப் பரப்புரைக் குழுவிற்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
அச்சிறுபாக்கம்
மாநில இளைஞரணி செயலாளர் தம்பி பிரபாகரன் தலைமையிலான நீட் தேர்வை ரத்து செய்ய வலியு றுத்திய இரு சக்கர வாகன பரப்புரைப் பயணக் குழுவி னரை செங்கல்பட்டு மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் அச்சிறுபாக்கத்தில் மாவட்ட தலைவர் செங்கை சுந்தரம் தலைமையில், மாவட்ட செயலாளர் செம்பியன், மாவட்ட அமைப்பாளர் பொன்.ராஜேந்திரன், ஒன்றிய தலைவர் ம.நரசிம்மன், ஒன்றிய தலைவர் யாக்கோபு, மாவட்ட இளைஞரணி செயலாளர் வினோத், மறைமலைநகர் ம.ஏழுமலை ஆகியோர் வரவேற்றனர்.
மனித நேய மக்கள் கட்சி மாநில பொறுப்பாளர் எம்.ஷாஜகான், கழக துணை பொதுச் செயலாளர்
சே.மெ.மதிவதனிக்கு சால்வை அணிவித்து வரவேற்றார். குழு ஒருங்கிணைப்பாளர் கோ.வேலுக்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் வினோத் சால்வை அணிவித்து நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கி னார். ஒன்றிய தலைவர் யாக்கோபு வரவேற்புரை நிகழ்த்தினார். அச்சிறுபாக்கம் பேருந்து நிலையம் அருகில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி துணைப் பொதுச் செயலாளர் சே.மெ.மதிவதனி சிறப்புரை ஆற்றினார். ஒன்றிய தலைவர் ம.நரசிம்மன் நன்றி கூறினார்.
மதுராந்தகம்
நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி இரு சக்கர வாகன பரப்புரை பயணக் குழுவினரை மதுராந்தகம் நகராட்சி அலுவலகம் அருகில் நகர தலைவர் பொன்.மாறன் தலை மையில், மாவட்ட இளைஞரணி தலைவர் செ.கவுதம் வரவேற் றார். மாவட்ட தலைவர் செங்கை சுந்தரம் தொடக்க உரை ஆற்றினார். துணைப் பொதுச் செயலாளர் சே.மெ.மதி வதனி சிறப்புரை ஆற்றினார். திமுக நகர்மன்ற தலைவர், நகர செயலாளர் குமார் குழுவினருக்கு தேநீர், தண்ணீர், குளிர்பானங்கள் வழங்கினார். திமுக தோழர்கள், மனித நேய மக்கள் கட்சி பொறுப்பாளர்கள், திராவிடர் கழக மாவட்ட செயலாளர் செம்பியன், மாவட்ட அமைப்பாளர் பொன்.ராஜேந்திரன், ஒன்றிய தலைவர் ம.நரசிம்மன், ஒன்றிய தலைவர் யாக்கோபு, மாவட்ட இளைஞரணி செயலாளர் வினோத், மறைமலைநகர் ம.ஏழுமலை ஆகியோர் கலந்து கொண்டனர்.
நகர செயலாளர் ஏ.செல்வம் நன்றி கூறினார். பயணக் குழு தலைவர் தம்பி பிரபாகரன், ஒருங்கிணைப்பாளர் கோ.வேலு மற்றும் அனைவருக்கும் நகர திராவிடர் கழகம் சார்பில் பயனாடைகள் அணிவித்து சிறப்பு செய்யப்பட்டது
செங்கல்பட்டு
செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியு றுத்தி இரு சக்கர வாகன பரப்புரை பயணக் குழுவினரை ஒன்றிய தலைவர் ம.நரசிம்மன் தலைமையில், மாவட்ட செயலாளர் செம்பியன் வர வேற்றார். மாவட்ட தலைவர் செங்கை சுந்தரம் தொடக்க உரை ஆற்றினார். துணைப் பொதுச் செயலாளர் சே.மெ.மதி வதனி சிறப்புரை ஆற்றினார். மாவட்ட அமைப்பாளர் பொன்.ராஜேந்திரன் நன்றி கூறினார்.
திமுக நகர துணை செயலாளர் ஆர்.ராஜி பயணக் குழுவினரை சால்வை அணி வித்து வரவேற்றார். புத்த ஒளி பன்னாட்டு பேரவை தலைவர் ஓவியக்கவி நா.வீரமணி மாண வர்கள் வரைந்த தந்தை பெரியார், புரட்சியாளர் அம்பேத்கர் ஆகியோரின் கருப்பு வெள்ளை படங்களை துணைப் பொதுச் செயலாளர் உள்ளிட்ட அனைவருக்கும் வழங்கி வரவேற்றார்.
மாவட்ட அமைப்பாளர் பொன்.ராஜேந்திரன் அனைவருக்கும் தண்ணீர் குளிர்பானங்கள் வழங்கினார். பொதுக்குழு உறுப்பினர் கருணாகரன், ஒன்றிய தலை வர் யாக்கோபு, மாவட்ட இளைஞரணி தலைவர் செ.கவுதம், மாவட்ட இளைஞரணி செயலாளர் வினோத், மறைமலைநகர் நகர தலைவர் திருக்குறள் வெங்கடேசன், வள்ளுவர் மன்ற செயலாளர் ம.சமத்துவமணி, பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர் அ.சிவகுமார், மாவட்ட செயலாளர் மு.பிச்சைமுத்து, ம.ஏழுமலை, சிபிஅய் மனோகரன், சிபிஎம் க.தனசேகரன்ஆகியோர் கலந்து கொண்டனர்.