புதினா இலைச்சாறு, எலுமிச்சை சாறு தலா 100 மில்லி, கால் கிலோ தேன் சேர்த்து கொதிக்க வைத்து, நாள்தோறும் ஒரு தேக்கரண்டி காலை, மாலை குடித்தால் நன்றாகப் பசி எடுக்கும்.
ஒரு கைப்பிடி புதினா இலையுடன் 5, 6 மிளகு சேர்த்து அரைத்து, காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் சளி, இருமல், நுரையீரல் கோளாறுகள் நீங்கும்.
புதினாவைக் காய வைத்துப் பொடியாக்கி அதில் உப்பு சேர்த்துப் பல் துலக்கி வந்தால் பல் வலி குணமாகும்.
புதினா, கிராம்பு, சோம்பு மூன்றையும் ஒன்றாகச் சேர்த்து மென்று துப்பினால் வாய் துர்நாற்றம் நீங்கும்.
புதினா இலைச்சாறுடன் பச்சைக் கற்பூரம் கலந்து மூட்டுவலி உள்ள இடத்தில் தடவினால் வலி குறையும்.
புதினாவை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால் பித்தம் குறையும்.
புதினா இலை, வேப்பிலை சம அளவு எடுத்து அரைத்து தினமும் காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் குருதியைத் தூய்மையாகும்.
நம்மோடு புதினாவின் பயன்பாடு
Leave a Comment