குழந்தை திருமண தடை சட்டம் அனைத்து மதத்துக்கும் பொருந்தும் கேரள உயர் நீதிமன்றம் ஆணை

1 Min Read

கொச்சி, ஜூலை 29- ‘குழந்தை திருமண தடை சட்டம், மத வேறுபாடின்றி அனைத்து இந்திய குடிமக்களுக்கும் பொருந்தும்’ என, கேரள உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கேரளாவின் பாலக் காட்டில் வசிக்கும் முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த சிறுமிக்கு, 2012 டிச., 30இல் திருமணம் நடந்தது. இது தொடர்பாக, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவ லர் வடக்கன்சேரி காவல் துறையில் புகார் அளித்தார்.
கேரள உயர் நீதி மன்றத்தில் நடந்த விசாரணையின் போது, ‘பெண் பூப்பெய்திய உடன் அவருக்கு திருமணம் செய்து வைக்க முஸ்லிம் சட்டம் இடம் அளிக்கிறது’ என, சிறுமியின் தந்தை தரப்பில் வாதிடப்பட்டது.

வழக்கு விசாரணை முடிவுக்கு வந்ததை அடுத்து, நீதிபதி குன்னிகிருஷ்ணன் தீர்ப்பளித்தார். அதன் விவரம்:
குழந்தை திருமணங்கள் குழந்தைகளின் அடிப் படை மனித உரிமையை பறிக்கின்றன. கல்வி மறுக் கப்படுகிறது. இளம் வயதில் கர்ப்பம் அடைவதால் உடல்நலக் கோளாறுகள் ஏற்படுகின்றன. பேறுகால மரணங்கள் நடக்கின்றன. பாலியல் ரீதியிலான தொற்றுகளுக்கு பெண் குழந்தைகள் ஆளாகின்றனர்.
குழந்தை திருமணங்கள் பெண் குழந்தைகளை உணர்வுப்பூர்வமாகவும், மனதளவிலும் சிதைக் கின்றன. சமூக ரீதியாக அவர்கள் தனிமைப்படுத்தப ்படுகின்றனர்.

மேலும், குழந்தைத் திருமணம் என்பது பன்னாட்டு மனித உரிமைகள் சட்டம் மற்றும் மரபுகளையும் மீறுவதாகும்.
குழந்தைத் திருமண தடுப்புச் சட்டம் இயற் றப்பட்டு பல ஆண்டுகள் ஆகியும், கேரளாவில் தொடர்வது வேதனை அளிக்கிறது.
மதங்களை கடந்து ஒருவர் இந்நாட்டு குடிமகன் என்பதே முதன்மையானது. அதன் பின் தான் அவர் சார்ந்த மதத்தின் உறுப்பினர் என்ற தகுதியினை அடைகிறார். எனவே, குழந்தை திருமண தடுப்புச் சட்டம் – 2006, இந்நாட்டு குடிமக்கள் அனைவருக்கும் பொருந்தும்.
-இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *