அமித்ஷா உள்துறை அமைச்சராக இருப்பதுதான் விந்தையானது சரத்பவார் கடும் விமர்சனம்

viduthalai
2 Min Read

சம்பாஜிநகர், ஜூலை 28 உச்ச நீதிமன்றத்தால் குஜராத்தில் இருந்து வெளியேற்றப்பட்டவர் உள்துறை அமைச்சராக இருப்பதுதான் விந்தை யானது என்று சரத் பவார் ஆவேசமாக தெரிவித்துள்ளார்.

மகாராட்டிராவில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க ஜூலை21ஆம் தேதி புனேயில் நடந்த பா.ஜ மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தேசியவாத காங்கிரஸ் கட்சி(சரத்சந்திரபவார்) பிரிவு தலைவர் சரத்பவாரை கடுமையாக விமர்சனம் செய்தார்.

’எதிர்க்கட்சியினர் ஊழல் குறித்து பேசுகிறார்கள். இந்திய அரசியல் வர லாற்றில் மிகப் பெரிய ஊழல் மன்னன், ஊழல் வாதிகளின் தலைவன் சரத் பவார் தான். என்று அமித்ஷா பேசியிருந்தார். இதனால் ஆவேசம் அடைந்த சரத்பவார் நேற்று (27.7.2024) பதிலடி கொடுத்தார்.

இதுதொடர்பாக சரத் பவார் கூறுகையில்,’ சில நாட்களுக்கு முன்பு உள்துறை அமைச்சர் அமித் ஷா சில விடயங்களைக் கூறி என் மீது தாக்குதல் தொடுத்திருந்தார். நாட்டி லுள்ள ஊழல்வாதிகளுக்கு எல்லாம் தலைவன் என்று என்னை அழைத் திருந்தார். இதில் விநோதமான விடயம் என்னவென்றால், உள்துறை அமைச்சராக இருக்கும் அமித்ஷா குஜராத்தில் சட்டத்தை தவறாக பயன்படுத்தியதற்காக அந்த மாநிலத்தில் இருந்து வெளியேறும்படி உச்ச நீதிமன்றத்தால் நிர்பந்திக்கப்பட்டார். சட்டத்தை தவறாகப் பயன்படுத்தியதால், உச்ச நீதிமன்றத்தால் குஜராத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட ஒருவர் இப்போது இந்தி யாவின் உள்துறை அமைச்சராக இருப்பது விந்தையானதுதான் என்று தெரிவித்துள்ளார்.

நேரு, படேல் தலைமைத்துவம்

சரத்பவார் மேலும் பேசுகையில்,’ நவீன இந்தியா பற்றிய நேருவின் தொலைநோக்கு நாட்டின் முன்னேற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் அவசியமா னது. நாட்டை உலகின் மய்ய மேடையில் கொண்டு செல்லும் தொலைநோக்கு அவருக்கு இருந்தது. அவரது தலைமைத்துவம் பிரிவினைக்குப் பிறகு நாட்டை ஒற்றுமையாக வைத்திருக்க இது தேவைப் பட்டது. நாட்டின் முதல் உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் படேல் திறமையான நிர் வாகியாகவும், விவசாயிகள் மற்றும் தொழிலாள வர்க்கத்திற்காகவும் பணி யாற்றினார். சுதந்திரத் திற்குப் பிந்தைய நாட்டை ஒன்றிணைப்பதில் படேலின் பங்களிப்பு மகத்தானது. காந்தியார் இரு தலைவர்களின் (நேரு மற்றும் படேல்) திறன்களையும் அவர்களின் தலைமைப் பண்புகளையும் அறிந்திருந்தார்’ என்று கூறினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *