தந்தை பெரியாருடைய கருத்துகளை தெரிவிக்கும் வகையில், குமரி மாவட்ட கழகம் சார்பாக குமரி மாவட்ட கல்லூரி மாணவர்களுக்கு பகுத்தறிவு விழிப்புணர்வு துண்டறிக்கையினை வழங்கினர்.
நாகர்கோவில் பகுதிகளில் இன்று நடந்த இந்த பரப்புரை நிகழ்ச்சிக்கு மாவட்டத் தலைவர் மா.மு.சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் கோ. வெற்றிவேந்தன் பரப்புரையைத் தொடங்கி வைத்தார். மாவட்ட இளைஞரணி தலைவர் இரா.இராஜேஸ் முன்னிலை வகித்தார். அதிகமான மாணவ,மாணவியர்கள் கழகத்தின் நீட் எதிப்பு பரப்புரைகள் மற்றும் பெரியாருடைய வரலாறு, கொள்கைகளை தெரிந்து கொண்டனர்.