சென்னை, ஜூலை 27- வேளாண்மை துறையில் மேற்கொள்ள வேண்டிய மேம்பாட்டுப் பணிகள், ஆராய்ச்சிகள், தொழில் நுட்பங்களை மேம்படுத்தும் வகையில் வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலை மையிலான குழுவினர் ஆஸ்திரேலியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு அரசு முறை பயணமாக சென்றுள்ளனர்.
இந்த பயணத்தின் இரண் டாம் கட்டமாக ஆஸ்திரே லியா ஹோபர்ட் நகரத்தில் உள்ள டாஸ்மானியா வேளாண்மை ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் பல்துறை வல்லுனர்களுடன் கலந்துரையாடல் மற்றும் தொழில்நுட்பங்கள் தொடர் பான கருத்து பரிமாற் றங்கள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலை மையில் மேற்கொள்ளப்பட்டது.
கலந்தாய்வில் வேளாண் மை உற்பத்தி ஆணையர் மற் றும் அரசு முதன்மைச் செயலர் அபூர்வா, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழக துணை வேந்தர் கீதாலட்சுமி, நீர் மற்றும் புவியியல் ஆய்வு மய்ய இயக்குநர் பழனிவேலன், இயக்குனர் (ஆராய்ச்சி) ரவீந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த கலந்துரையாடலின் போது, மண் வள ஆராய்ச்சிகள் தொடர்பான உயர் தொழிற் நுட்பங்கள் குறித்து, டாஸ்மானியா வேளாண்மை பல்கலைக்கழக மண்வளத் துறை சார்ந்த பேராசிரியர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுடன் ஆலோசிக்கப்பட்டது.
அதிகனமழை பொழிதல், பயிர்களில் அதிக பூச்சி தாக்குதல், வறட்சி, வெள்ளம் போன் றவற்றிலிருந்து பயிர்களை காப்பது தொடர்பான முன் னெச்சரிக்கை தொழில் நுட்பங்கள் குறித்தும் கலந்தாலோசிக்கப்பட்டது.
உயர்தொழில்நுட்பங்களை கொண்டு சத்தான பழ வகைகள் மற்றும் காய்கறிகளை விளைவிப்பது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது.
டாஸ்மானியா பல்கலைக் கழகத்தில் பின்பற்றப்படும் வேளாண்மை தொழில் நுட்பங்கள் மற்றும் உயர் தொழில் நுட்பங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக முதலமைச்சரின் உத்தரவை பெற்று தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தப்படும் என்று அமைச்சர் எம்.ஆர். கே.பன்னீர் செல்வம் தெரி வித்தார். இவ்வாறு தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய் திக்குறிப்பில் குறிப்பிடப் பட்டுள்ளது.