திருச்சி, ஆக. 16- திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரியில் மருந் தாக்க வேதியியல் துறை சார்பில் கணினி பயன்பாட்டுடன் மருந்தி யல் கண்டுபிடிப்பிற்கான வளர்ச்சி குறித்த ஒரு நாள் கருத்தரங்கம் 12.08.2023 அன்று நடைபெற்றது.
இதன் துவக்கவிழா காலை 10 மணியளவில் பெரியார் மருந் தியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் இரா.செந்தாமரை தலைமையில் நடைபெற்றது.
பெரியார் மருந்தியல் கல்லூரி யின் துணை முதல்வர் முனைவர் கோ. கிருஷ்ணமூர்த்தி வரவேற் புரையாற்றினார். பேராசிரியர் முனைவர் அ.மு.இஸ்மாயில் வாழ்த்துரை வழங்கினார். துவக்க விழா நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர் திருச்சி பாரதி தாசன் பல்கலைக்கழகத்தின் உயிர் தொழில் நுட்பவியல் துறைத் தலைவர் பேராசிரியர் முனைவர் பி. செல்லபாண்டி மருந்து கண்டுபிடிப்பில் தொழில் நுட்பத்தின் பத்கு குறித்து சிறப் புரையாற்றினார். தொடக்க விழா நிகழ்ச்சியின் நிறைவாக மருந்தாக்க வேதியியல் துறை பேராசிரியர் ஜே.மோனிசா நன்றியுரையாற்றினார்.
மருத்துவ வடிவமைப்பில்…
அதனைத் தொடர்ந்து முதல் அமர்வாக மருந்து வடிவமைப் பில் இன்றைய வளர்ச்சி குறித்து முனைவர் பி. செல்லபாண்டி மாணவர்களுக்கு விளக்கினார். கொச்சி, அம்ரிதா மருந்தியல் கல்லூரியின் வேதியியல் துறைத் தலைவர் பிஜோமாத்யூ மருந் துகள் வடிவமைப்பு குறித்து தமது இரண்டாம் அமர்வில் விளக்கினார். கோயம்புத்தூர் சிறீஇராமகிருஷ்ணா மருந்தியல் நிறுவனத்தின் மருந்தாக்க வேதி யியல் துறை இணைப் பேராசிரி யர் முனைவர் சோனியா ஜார்ஜ் அவர்கள் நோய் எதிர்ப்பு மருந் துகளில் சிலிகோ பயன்பாடுகள் குறித்து தமது மூன்றாம் அமர் வில் விளக்கினார். ஊட்டி ஜே.எஸ்.எஸ் .மருந்தியல் கல்லூரி யின் மருந்தாக்க வேதியியல் இணைபேராசிரியர் முனைவர் எஸ்.ஜூபி மருந்தியல் ஆராய்ச் சிக்கான மூலக்கூறுமாதிரிகள் குறித்து உரையாற்றினார்.
முடக்குவாத நோய்க்கான மருந்து
ஈரோடு நந்தா மருந்தியல் கல்லூரியின் மருந்தாக்க வேதி யியல் துறைத் தலைவர் பேராசிரி யர் முனைவர் டி. பிரபாஅவர்கள் முடக்குவாத நோய்க்கான மருந்து கண்டுபிடிப்பு குறித்து அய்ந்தாவது அமர்வில் விளக் கினார்.
அதனைத் தொடர்ந்து மாலை 5 மணியளவில் நிறைவு விழா கல்லூரி அரத்கத்தில் நடை பெற்றது. பெரியார் மருந்தியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் இரா. செந்தாமரை தலைமையில் மருந்தாக்க வேதியியல் துறை பேராசிரியர் எம்.கே.எம். அப் துல் லத்தீஃப் வரவேற்புரையாற் றினார். பெரியார் மருந்தியல் கல்லூரியின் பேராசிரியர் முனைவர் அ.மு.இஸ்மாயில் மற் றும் துணை முதல்வர் முனைவர் கோ. கிருஷ்ணமூர்த்தி ஆகி யோர் முன்னிலை வகித்தனர். நிறைவு விழா சிறப்பு விருந்தினர் பேராசிரியர் முனைவர் டி. பிரபா மருந்தியல் கண்டுபிடிப் புகளில் தற்போதைய வளர்ச்சி மற்றும் மருந்தாளுநர்களுக்கு தேவையான தொழில் நுட்ப அறிவுகள் குறித்து உரையாற்றி கருத்தரத்கில் பத்குகொண்ட பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி சிறப்பித்தார்.
பல்வேறு மருந்தியல் மற்றும் கலை, அறிவியல் கல்லூரிகளி லிருந்து 170 மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்த இந்நிகழ்விற்கு மருந்தாக்க வேதியியல் துறை பேராசிரி யர் கே. கங்காதேவி நன்றியுரை யாற்றினார்.