அரசியல் கிளர்ச்சிகள் ஏற்பட்ட பிறகு, அதனால் கிளர்ச்சிக்காரர்கள் அடைந்த பலன்களைக் கண்ட பிறகு, விளம்பரக் கிளர்ச்சிகள் ஏற்பட்ட பிறகு, அதனால் விளம்பரக்காரர்கள் அடைந்த பலன்களைக் கண்ட பிறகு, உண்மைக் கிளர்ச்சிக்கு, அதாவது பலனும், விளம்பரமும் இல்லாத கிளர்ச்சிக்கு ஆள்கள் வருவது அரிது என்பதன்றி, வருபவர்கள் – வருவதற்கும் வெட்கப்படாமலிருக்க முடியுமா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’