பிரபுல் தேசாய் 2019 ஆம் ஆண்டு யுபிஎஸ்இ தேர்ச்சி பெற்றவர்.
பெருமூளை வாதப் பாதிப்பு, லொகோ அதாவது கால்கள் முடங்கிய நிலை என்ற மாற்றுத்திறனாளி சான்றிதழ் கொடுத்து, அந்தப் பிரிவிற்கான தகுதியில் இவர் தேர்ச்சி பெற்றார்.
ஆனால், ஓராண்டு பயிற்சி யின் போது டெஹராடூன் இமய மலை அடிவாரத்தில் தனது நண்பர்களோடு 30 கிலோ மீட்டர் ‘சைக்கிளிங்‘ செய்கிறார்.
அதை அவரே பெருமையோடு சமூக வலைதளத்தில் படமாக வெளியிடுகிறார். இவர் போலி மாற்றுத்திறனாளி சான்றிதழோடு பார்ப்பனர்களுக்கான 10 விழுக்காடு இட ஒதுக்கீட்டின் கீழ் சான்றிதழ் கொடுத்துள்ளார்.
பொதுவாக பெருமூளை வாதம் (cerebral palsy) நோயால் பாதிக்கப்பட்டவர்கள் யாருடைய துணையுமின்றி சில அடிகள் தூரம் கூட நடக்க முடியாத சூழல். ஆனால், இவரோ இமயமலைச்சாரலில் பல கிலோ மீட்டர் இன்பச்சுற்றுலா அதுவும் சைக்கிளில் நண்பர்களோடு பயணிக்கிறார்.