25.7.2024
டெக்கான் கிரானிக்கல், சென்னை
அரசியல் விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்ப அரசை நடத்தினால் தனிமைப்பட்டுப் போவீர்கள்: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!
குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்ட உத்தரவாதம் – ஒன்றிய அரசுக்கு இந்தியா கூட்டணி அழுத்தம் கொடுக்கும்: விவசாயிகளிடம் ராகுல் காந்தி உறுதி.
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்
அரசு பணியில் உள்ளவர்கள் ஆர்.எஸ்.எஸ்.இல் சேரலாம் என்ற மோடி அரசின் உத்தரவு, ஆர்.எஸ்.எஸ்.-அய் தாஜா செய்யவே என்கிறது தலையங்க செய்தி.
தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களுக்கு நிதிநிலை அறிக்கையில் பாரபட்சம் – எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு: நாடாளுமன்ற வளாகத்தில் ‘இந்தியா’ கூட்டணி ஆர்ப்பாட்டம்.
விவசாயிகள் ஆர்ப்பாட்டம்; உச்சநீதிமன்றம் குழு அமைத்து கோரிக்கைகளை விசாரிக்க முடிவு.
இந்தியன் எக்ஸ்பிரஸ்
ஆந்திராவில் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் – பாஜக – ஜனசேனா கூட்டணி ஆட்சியின் அடக்கு முறைகளுக்கு டில்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்திய ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவரும் மேனாள் முதலமைச்சருமான ஜெகன் மோகன் ரெட்டிக்கு இந்தியா கூட்டணி தலைவர்கள் பலரும் நேரில் சென்று ஆதரவு.
“கூட்டணி என்றால் ஒத்துழைப்பு, ஒத்துழைப்பு, ஒற்றுமை. ஆனால், நேற்றைய தினம் (23.7.2024), பாஜக கூட்டணி என்பது சமாதானம் மற்றும் இழப்பீடு” என்று திரிணாமுல் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் அபிஷேக் விளாசல்.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்
மேற்கு வங்க சட்டமன்றத்தில் நீட் தேர்வுக்கு எதிராக திரிணாமுல் காங்கிரஸ் தீர்மானம் கொண்டு வந்தது.
தி இந்து
நீதிபதியாக இருந்து ஓய்வுபெற்ற மறுநாளே பாஜகவில் சேர்ந்த கங்கோபாத்யாய், காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கோகோய் ஆகியோர் கோட்சே குறித்து மக்களவையில் கடும் வாக்குவாதம்.
டைம்ஸ் ஆப் இந்தியா
நிதிஷ் குமார்: 65% இடஒதுக்கீட்டை 9ஆவது அட்டவணையில் சேர்க்க ஒன்றிய அரசுக்கு கோரிக்கை.
– குடந்தை கருணா