பொற்பனைக்கோட்டை அகழாய்வில் சூது பவள மணிகள் கண்டெடுப்பு

2 Min Read

புதுக்கோட்டை, ஜூலை 25- புதுக்கோட்டை அருகேயுள்ள பொற்பனைக்கோட்டையில் நடைபெற்று வரும் இரண்டாம் கட்ட அகழாய்வில், 2 சூதுபவள மணிகளும், அக்கேட் வகை மணி ஒன்றும் கிடைத்துள்ளன.

முழுமை பெறாத வடிவத்தில் உள்ள இந்த மணிகள் கிடைத்துள்ள நிலையில், பொற்பனைக்கோட்டை பகுதிக்குள் மணிகள் தயாரிப்புக் கூடம் இருந்திருக்கலாம் என அகழாய்வுத் தள இயக்குநர் த. தங்கதுரை தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக்கோட்டையில் தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில் கடந்தாண்டு நடைபெற்ற முதல் கட்ட அகழாய்வில், கழிவுநீர் வாய்க்கால் போன்ற செங்கல் தளம், வட்ட வடிவ செங்கல் கட்டுமானம் போன்றவை கண்டறியப்பட்டன. மேலும், தங்க மூக்குத்தி, எலும்பு முனைக் கருவிகள் உள்பட 500-க்கும் மேற்பட்ட தொல்பொருள்களும் கிடைத்தன.இதன் தொடர்ச்சியாக கடந்த ஜூன் 18 ஆம் தேதி இரண் டாம் கட்ட அகழாய்வை முதல மைச்சர்மு.க. ஸ்டாலின் காணொ லிக் காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

சில நாள்களுக்கு முன்பு 4 செம்பு ஆணிகளும், ஒரு அஞ்சனக்கோலும் கிடைத்தன. மேலும், கண்ணாடி மணிகள், பச்சைக் கல் மணிகள், கிரிஸ்டல் மணிகள், அக்கேட் (Agate), சூது பவளம் (Carnelian), செவ்வந்திக் கல் (Amethyst) என ஜூலை 23 வரை 470 கண்ணாடி மணிகள் கிடைத்துள்ளன.

இதில், இரண்டு சூது பவள மணிகள் (நீளம் -0.7 செ.மீ, விட்டம்- 1.1 செ.மீ, எடை 0.77 கிராம்), (நீளம்- 0.7 செ.மீ, விட்டம்- 0.3 செ.மீ, எடை – 0.22 கிராம்) கண் டெடுக்கப்பட்டுள்ளன.

இதில், ஒரு மணி முழுமை பெற்ற நிலையிலும், மற்றொன்று முழுமை பெறாத நிலையிலும் உள்ளன. இதேபோல அக்கேட் வகை மணி ஒன்றும் (நீளம் 0.2 செ.மீ, விட்டம் 0.4 செ.மீ, எடை 0.04 கிராம்) கிடைத்துள்ளது. இது துளையிடத் தொடங்கி முழுமை பெறாமல் பாதியிலேயே நிறுத்தப்பட்டதாகத் தெரிகிறது.

முழுமையானதாகவும் முழுமை பெறாத நிலையிலும் கிடைத்துள்ள இந்த மணிகள், பொற்பனைக்கோட்டையில் உள்நாட்டு வணிகம் செழித்திருந் ததையும், மணிகள் செய்வதற்கான தொழிற்கூடம் இதேப் பகுதியில் இருந்ததற்கான சான்றாகவும் எடுத்துக் கொள்ளலாம்.
இதேபோல, கடந்தாண்டு உடைந்த நிலையில் வட்ட வடிவ சூதுபவள மணி ஒன்று கிடைத் திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *