23.7.2024
டெக்கான் கிரானிக்கல், சென்னை
நிதிஷ்குமாருக்கு செம நோஸ் கட்- பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து இல்லை. ஒன்றிய அரசு கைவிரிப்பு.
டெக்கான் கிரானிக்கல்,அய்தராபாத்
கன்வார் பயண வழியில் உணவக உரிமையாளர் பெயர் கட்டாயம் என்ற உ.பி., உத்தரகாண்ட் அரசாணை மீது உச்சநீதிமன்றம் தடை.
நீட் தேர்வு மோசடி குறித்து நாடாளுமன்றத்தில் காரசார வாதம் – எதிர்க்கட்சி எம்பிக்கள் சரமாரி குற்றச்சாட்டு: இந்திய தேர்வு முறையே ஒரு மோசடி ராகுல்காந்தி கடும் விமர்சனம்.
அரசு ஊழியர்கள் ஆர்.எஸ்.எஸ்.இல் பங்கேற்க தடையில்லை என்ற ஒன்றிய அரசுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு. அரசுத் துறையை அரசியலாக்கும் முயற்சி என கண்டனம்.
இந்தியன் எக்ஸ்பிரஸ்
நீட் மீதான புயல் – பொருளாதார கணிப்புகளுக்கு எதிராக அமைக்கப்பட்ட ரயில்வே சர்ச்சைகளுக் கிடையே ஒன்றிய பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குகிறது.
மத நல்லிணக்கத்தை பேணுவதற்கான நல்ல தீர்ப்பு: கன்வார் பயணம் மற்றும் உணவுக் கடைகள் மீதான உச்ச நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவு குறித்து பாஜக கூட்டணிக் கட்சியான நிதிஷ் குமாரின் அய்க்கிய ஜனதா தளம் கருத்து.
பங்களாதேஷில் இட ஒதுக்கீடு முறை எதிர்ப்புகள்: அமைதியின்மை ஆழமாக வேரூன்றிய அரசியல் பிளவுகளை எடுத்துக் காட்டுகிறது என்கிறார் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக பேராசிரியர் சஞ்சய் பரத்வாஜ்.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்
விவசாயிகள் சங்கம் மீண்டும் போராட்டம்; ஆகஸ்ட் 15 அன்று நாடு முழுவதும் டிராக்டர் அணிவகுப்புகளை அறிவித்துள்ளது; ஆகஸ்ட் 1ஆம் தேதி ஆளும் பாஜகவின் உருவபொம்மையை எரிக்கவும் முடிவு.
டைம்ஸ் ஆப் இந்தியா
மோடி அரசின் பொருளாதார சர்வே, வறுமை குறித்து பொய்களை அவிழ்த்து விட்டுள்ளது – காங்கிரஸ் விமர்சனம்.
நீட் தேர்வு உள்ளிட்ட தேர்வுகளை நடத்தும் தேசிய தேர்வு முகமை நிறுவப்பட்டதில் இருந்து இதுவரை 16 தேர்வுகளை நிறுத்தி வைத்து சாதனை.
அரசு ஊழியர்களை ஆர்எஸ்எஸ்-சில் சேர ஒன்றிய அரசு அனுமதி. அரசு ஊழியர்கள் இனி ‘அரை டிராயர்’ அணிந்து வரலாமா? என்கிறார் காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ்.
உள் ஒதுக்கீடு குறித்த அறிக்கையை சமர்ப்பிக்க இன்னும் ஒரு ஆண்டு கோருகிறது தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம்.
– குடந்தை கருணா