மின் கட்டணம்
மின் கட்டணம் செலுத்துவதை மேலும் எளிதாக்கும் வகையில், ‘க்யு ஆர் கோடு’ வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வடக்கு மாவட்டங்களில் உள்ள மின் வாரிய அலுவலகங்களில் தற்போது சோதனை அடிப்படையில் தொடங்கப்பட்டுள்ள இத்திட்டம் விரைவில் தமிழ்நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும் என தமிழ்நாடு மின்வாரிய அதிகாரிகள் கூறியுள்ளார்.
சேர்க்கை…
2024-2025ஆம் கல்வியாண்டுக்கான இயற்கை மருத்துவம் மற்றும் யோகா குறித்த பட்ட மேற்படிப்பு ஆகியவற்றின் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு இன்று முதல் தொடங்குகிறது.
ஊக்கத் தொகை…
ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குடிமைப் பணிகள் முதன்மைத் தேர்வுக்குத் தயாராவதற்கு ஊக்கத் தொகைத் திட்டத்துக்கு வரும் 28ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.