‘பெரியார் விஷன்’ OTT தளத்தினை தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர், தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி தொடங்கி வைத்தார். பெரியார் விஷன் OTT தள ஒலிப் பதிவுக் கூடத்தை திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி திறந்து வைத்தார். உடன்: திரைப்பட நடிகர் ‘இனமுரசு’ சத்யராஜ், ஓவியர் டிராட்ஸ்கி மருது, இயக்குநர் ஞான. ராஜசேகரன், கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், பொதுச் செயலாளர் வீ அன்புராஜ், பொருளாளர் வீ. குமரேசன், பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ. அருள்மொழி, செயலவைத் தலைவர் வழக்குரைஞர் ஆ. வீரமர்த்தினி, துணைப் பொதுச் செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார், மதிசீலன்.
விழா மேடையில் தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினரும், தி.மு.க. துணைப் பொதுச் செயலாளருமான கனிமொழி கருணாநிதி, ‘இனமுரசு’ சத்யராஜ், இயக்குநர் ஞான. ராஜசேகரன், ஓவியர் டிராட்ஸ்கி மருது ஆகியோருக்கு தமிழர் தலைவர் பொன்னாடை அணிவித்து, இயக்க நூல்களை வழங்கினார்.