விழுப்புரம், ஜூலை 21- கள்ளக்குறிச்சி விஷ சாராய நிகழ்வு தொடர்பாக பாஜ மாநில செயலாளர் சூர்யாவிடம் சிபிசிஅய்டி காவல்துறையினர்விசாரணை நடத்தினர். கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் மெத்தனால் கலந்த விஷ சாராயம் அருந்தி 67 பேர் உயிரிழந்தனர். இது குறித்து சிபிசிஅய்டி காவல்துறையினர்வழக்கு பதிந்து குற்றவாளிகளை கைது செய்தனர்.
இந்நிலையில், பாஜ மாநில செயலாளர் எஸ்.ஜி. சூர்யா தனது எக்ஸ் தளத்தில் மெத்தனால் எங்கிருந்து வந்தது என்றும், புதுச்சேரி, தமிழ்நாடு காவல்துறையினரை தொடர்புபடுத்தியும் ஒரு கருத்தை பதிவிட்டு இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் தமிழ்நாடு காவல்துறை பற்றி அவதூறாக கருத்து கூறியிருந்தார். கள்ளக்குறிச்சி விஷசாராய வழக்கில் சிபிசிஅய்டி காவல்துறையினர்நேர்மையான கோணத்தில் விசாரணை நடத்தி குற்றவாளிகளை கைது செய்துள்ளனர் என்று பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
அதற்கு மாறாக பாஜ மாநில செயலாளர் சூர்யா கூறிய கருத்திற்கு நேரில் விளக்கம் அளிக்க வேண்டும் என்று சென்னையில் உள்ள அவரது வீட்டிற்கு சிபிசிஅய்டி காவல் துறையினர் அழைப்பாணை அனுப்பி இருந்தனர். அதன்படி நேற்று (20.7.2024) காலை விழுப்புரம் வண்டிமேட்டில் உள்ள சிபிசிஅய்டி அலுவலகத்தில் பாஜ மாநில செயலாளர் சூர்யா ஆஜரானார். அவரிடம் ஏடிஎஸ்பி கோமதி தலைமையிலான காவல் துறையினர்விசாரணை நடத்தினர்.
சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. மெத்தனால் எங்கிருந்து வந்தது போன்ற கருத்துக்களை பதிவிட்டுள்ளீர்கள்? குற்றவாளிக்கும் உங்களுக்கும் தொடர்பு இருக்கிறதா என்று பல்வேறு கேள்விகளை எழுப்பி சிபிசிஅய்டி காவல்துறையினர்விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது.
கள்ளக்குறிச்சி விஷ சாராயப் பிரச்சினை சிபிசிஅய்டி அலுவலகத்தில் பிஜேபி மாநில செயலாளர்
Leave a comment