‘எல்லோருக்கும் எல்லாம்’ என்கிற சமூகநீதிப் பாதையை தமிழ்நாட்டில் அழுத்தம் திருத்தமாக நிறுவிச் சென்றவர், தந்தை பெரியார். அந்தக் குரலை வளர்ந்து வரும் துறைகளுக்கும் நீட்டிக்க வேண்டியது காலத்தின் தேவை. அந்த வகையில் திரைத்துறையில் சமூகநீதி, முற்போக்குச் சிந்தனை களைப் பேசும் படைப்பு களுக்குக் களம் அமைத்துத் தர உள்ளது ‘பெரியார் விஷன்’ OTT தளம்.
வர்த்தக ரீதியிலான OTT தளங்களில், சமூகநீதி பேசும் திரைப்படங்களுக்கு வாய்ப்புகள் மறுக்கப்படுவதுடன், பெரியாரியப் பார்வையில், மாற்று அரசியலைப் பேசும் திரைப்படங்களும் முற்றாகப் புறக்கணிக்கப்படுகின்றன. தவிர, அரசியல் ஆவணப்படங்கள், குறும்படங்களுக்கான ஒருங்கிணைந்த OTT தளம் இல்லை. இந்த இடைவெளியை குறைப்பதற்கான முயற்சியாக, ‘பெரியார் விஷன்’ OTT தளம் தொடங்கப்பட்ட உள்ளது.
இதன் தொடக்கவிழா, சென்னை, பெரியார் திடலில், உள்ள நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றத்தில் இன்று நடைபெறுகிறது. திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் வீரமணி, கழகத் துணைப் பொதுச் செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, நடிகர் சத்யராஜ் ஆகியோர் இதனைத் தொடங்கி வைக்க உள்ளனர்.
சமூகநீதிச் சிந்தனை கொண்டவர்களின் நீண்ட நாள் விருப்பமாக இருந்த முற்போக்கு OTT தளத்தின் தேவையை நிறைவேற்ற உள்ள பெரியார் விஷனுக்கு வாழ்த்துகள்!
-முரசொலி, 21.7.2024
வளரட்டும் ‘பெரியார் விஷன்! வாழ்த்துகிறது முரசொலி!

Leave a Comment