பெரியார் விஷன் OTT வெல்க! வெல்லும்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வாழ்த்துச் செய்தி!

viduthalai
1 Min Read

கழகம், தமிழ்நாடு

சென்னை, ஜூலை 21

பெரியார் விஷன் OTT வெல்க! வெல்லும்!! என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தன்னுடைய வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் இன்று (21.7.2024) பெரியார் விஷன் OTT தொடக்க விழா நடைபெற்றது. அவ்விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ள வாழ்த்துச் செய்தி காணொலிமூலம் ஒளிபரப்பப்பட்டது!
முதலமைச்சர் தன்னுடைய வாழ்த்துச் செய்தியில் தெரிவி்த்துள்ளதாவது:
அனைவருக்கும் வணக்கம்!
நான் இந்த முயற்சியையும், அறிவிப்பையும்
வணக்கம்!
தந்தை பெரியார் இன்று உலகளாவிய மானு டத் தலைவராகப் பார்க்கப்படுகிறார். அந்த வகையில், இன்றைய காலத்தின் தேவையாகத் தொடங் கப்பட்டுள்ள பெரியார் விஷன் OTT தளத்தைப் பாராட்டுகிறேன்.
தந்தை பெரியாருடைய சுயமரியாதைக் கொள்கைகளை உலகம் முழுவதும் கொண்டுபோய்ச் சேர்க்கக் கூடிய பணியில், பல்வேறு ஊடகங்களிலும், கலை வடிவங்களையும் நம்முடைய திராவிட இயக்கம் தொடர்ந்து பயன்படுத்தி வருகிறது.
அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி அதிகமாகி, சமூக ஊடகங்கள் பெருகியிருக்கின்ற இந்தக் காலகட்டத் தில், இளைஞர்களிடம் தந்தை பெரியா ருடைய கொள்கை களைக் கொண்டு சேர்க்கின்ற வகையில், சமூக நீதிக்கான உலகின் முதல் OTT-யாக பெரியார் விஷன் ஓடிடி தொடங்கப்படுகிறது.
ஒரு கொள்கைக்காகத் தொடங்கப்படும் உலகின் முதல் OTT-யாக இதுதான் இருக்கும் என்று நினைக்கின்றேன்.
எல்லாவற்றிலும் முன்னோடியாக இருக்கின்ற திராவிட இயக்கம் இதிலும் முன்னோடியாக இருக் கிறது.
சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு விழாவில், ‘குடிஅரசு’ இதழின் நூற்றாண்டு விழாவில், பெரியார் விஷன் OTT தொடங்கப்படுவது சிறப்புக்குரியது.
பெரியார் விஷன் OTT வெல்க! வெல்லும்!
– இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தன்னுடைய வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *