கோபி செட்டிப்பாளையம் கொள்கை வீரர் வழக்குரைஞர் வி.பி.சண்முகசுந்தரம் (வயது 80) மறைந்தார் என்ற தகவல் அறிந்து வருந்துகிறோம்.
அவசர கால நிலையில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களை அழைத்துத் தன் திருமணத்தை நடத்திய கொள்கை உறுதியாளர்.
ஒன்றிய அரசால் அமைக்கப்பட்ட சர்க்காரியா ஆணையத்தில் கலைஞருக்கு ஆதரவாக வாதாடிய வழக்குரைஞர் குழுமத்தில் ஒருவராக இருந்த தி.மு.க. முன்னணி வீரர்.
இவருடைய மூத்த மருமகன் மகாராட்டிர மாநிலத்தில் அய்.ஏ.எஸ். அதிகாரி – இரண்டாவது மருமகன் ஸ்பெயின் நாட்டில் தகவல் நுட்பத் துறை பொறியாளர் ஆவார்.
நம்மிடத்தில் அன்பும், மதிப்பும் கொண்டவர். அவர் பிரிவால் வருந்தும் அவர்தம் வாழ்விணையர் திருமதி கனகாம்பரம், மகள்கள் கனிமொழி, மதுமதி ஆகியோருக்கும், குடும்பத்தினருக்கும் ஆறுதலையும், இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
சென்னை தலைவர்
20.7.2024 திராவிடர் கழகம்
குறிப்பு: அவரது மருமகன் அன்பழகன் அய்.ஏ.எஸ். அவர்களிடம் தமிழர் தலைவர் தொலைபேசி மூலம் தனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்தார்.