‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும் சி.பி.அய். தேசிய செயலாளர் து.ராஜா

2 Min Read

புதுடில்லி, ஜூலை 20- அகில இந்திய பிரச்சினையாக மாறியுள்ள ‘நீட்’ தோ்வு ரத்து செய்யப்பட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (சி.பி.அய்.) தேசியப் பொதுச்செயலாளா் து.ராஜா வலியுறுத்தியுள்ளாா்.

டில்லி அஜோய் பவனில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் குழுக் கூட்டம் கடந்த 13, 14 மற்றும் 15 ஆகிய மூன்று நாள்கள் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நாட்டின் அரசியல், பொருளாதார வளா்ச்சி மற்றும் சமீபத்திய மக்களவைத் தோ்தல் தொடா்பான ஆய்வறிக்கையை கட்சியின் தேசியப் பொதுச் செயலாளா் து.ராஜா தாக்கல் செய்தாா். மக்களவைத் தோ்தல் முடிவுகள் மற்றும் கட்சியின் எதிா்காலத் திட்டங்கள் குறித்து இந்த மூன்று நாள் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டன.

‘நீட்’ தேர்வு முறைகேடு, மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் ஆகியவற்றைக் கண்டித்தும், பி.எஸ்.என்.எல். நிறுவனத்தை பாதுகாக்க வேண்டும், ஜம்மூ காஷ்மீா் மாநிலத்தில் சட்டப்பேரவைத் தோ்தலை வரும் செப்டம்பருக்குள் நடத்த வேண்டும் உள்ளிட்ட 10 முக்கியத் தீா்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.

பின்னர், இது தொடர்பாக து.ராஜா செய்தியாளர்களிடம் கூறியதாவது:

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் குழுக் கூட்டத்தில், நடந்து முடிந்த மக்களவைத் தேர்தல் தொடர் பாக மறுபரிசீலனை செய்யப்பட்டது. நாட்டில் நிலவும் பிரச்சினைகளுக்கு கட்சி முன்னெடுக்க வேண்டிய போராட்டங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டன.

அகில இந்திய பிரச்சினையாக ‘நீட்’ தோ்வு மாறியுள்ளது. ‘நீட்’ தோ்வு தமிழ்நாட்டின் பிரச்சினை மட்டும் கிடையாது. ‘நீட்’ தோ்வு ரத்து செய்யப்பட வேண்டும். கல்வி மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வரப்பட வேண்டும் என்ற கோரிக்கையை நாங்கள் ஆதரிக்கிறோம்.

மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் நாடாளுமன்ற நெறிமுறைகளுக்கு எதிராக நிறை வேற்றப்பட்டவை. இதை எதிா்த்து வழக்குரைஞா்கள் உள்பட பல்வேறு அரசியல் கட்சிகளும் போராடி வருகின்றன. மேலும், அமலாக்கத்துறை, வருமானவரித் துறை, ஒன்றிய புலனாய்வு அமைப்பு அனைத்தும் எதிா்க்கட்சித் தலைவா்களை இலக்கு வைத்து தாக்குவதற்காக ஒன்றிய பாஜக அரசால் பயன்படுத்தப்படுகின்றன. நாட்டின் ஜனநாயகம் மற்றும் அரசமைப்பிற்கு எதிரான இந்த நடவடிக்கைகளை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து எதிர்க்கும் என்றார் து.ராஜா.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *