19.7.2024
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தலைமறைவாக உள்ள பாஜக பெண் நிர்வாகி அஞ்சலையை காவல்துறையினர் வலைவீசி தேடி வரும் நிலையில் அவர் பாஜகவில் இருந்து நீக்கம்!
* உச்ச நீதிமன்ற நீதிபதியாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்.மகாதேவன் பதவி ஏற்றார்.
* தேர்வு மய்யம் வாரியாக அனைத்து மாணவர்களின் நீட் மதிப்பெண் விவரம் வெளியிட வேண்டும்: என்.டி.ஏ இணையதளத்தில் நாளை மதியம் 12 மணிக்குள் பதிவேற்ற கெடு, உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு.
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* தங்களை கடவுள் அவதாரம் என கூறிக் கொள்பவர் களை புறக்கணிப்போம். நாட்டில் கோடிக்கணக்கில் ஏற்கெனவே கடவுள்கள் உள்ளன என்கிறது தலையங்க செய்தி.
* விவசாயிகள் வாங்கிய பயிர்க் கடனை தள்ளுபடி செய்து வங்கிக் கணக்கில் ரூ.6000 கோடி செலுத்தியது தெலங்கானா அரசு. 11.5 லட்சம் விவசாயிகள் பயன் பெற்றனர்.
* சிலருக்கு கடவுளாக ஆசை.. கடவுளாக நினைத்தும் விஸ்வரூபம்.. மோடி மீது ஆர் எஸ் எஸ் மோகன் பகவத் அட்டாக்?
* வேலையின்மை, தொண்டர்கள் சோர்வு, இவையே மக்களவைத் தேர்தலில் உ.பி.யில் பாஜக தோல்விக்கு காரணம் என பாஜக மாநில தலைமை அறிக்கை.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* உ.பி, கன்வார் வழி உணவகங்கள், உரிமையாளர்கள் பெயரை வைக்க வேண்டும் என்ற உத்தரவுக்கு, பாஜகவின் கூட்டணி கட்சித் தலைவர்கள் கடும் எதிர்ப்பு. பாஜகவின் முக்தார் அப்பாஸ் நக்வி “அதிக ஆர்வமுள்ள அதிகாரிகளின் அவசர உத்தரவு” என எச்சரிக்கை. தாமாக முன் வந்து பெயரை வைக்கலாம் என தற்போது காவல்துறை விளக்கம்.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* நீட் வினாத்தாள் கசிவு வழக்கு பாட்னா எய்ம்ஸ் மருத்துவ மாணவர்கள் 4 பேர் கைது: விடுதி அறைக்கு சீல்.
* ஆம்ஸ்ட்ராங் கொலை: அதிமுகவைச் சேர்ந்த வழக்கு ரைஞர் மலர்க்கொடி கைது; பாஜக தொடர்புடைய செல்வராஜூம் கைது. மற்றொரு பாஜக பிரமுகர் அஞ்சலையை தேடி வருகிறது காவல்துறை.
தி இந்து:
* மூடநம்பிக்கையை எதிர்த்து போராட இந்தியாவில் போதுமான சட்டங்கள் உள்ளதா? என்பது குறித்து விரிவான கட்டுரை.
தி டெலிகிராப்:
* ஜோ பிடனின் வெற்றிக்கான பாதை குறைந்துவிட்டது என்கிறார் பராக் ஒபாமா.
* நீட் முறைகேடு, புதிய சட்டங்களுக்கு எதிராக மேற்கு வங்க பேரவையில் தீர்மானம்: திரிணாமுல் காங். சட்டமன்ற உறுப்பினர் தகவல்.
– குடந்தை கருணா
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
Leave a Comment