நாகை, ஜுலை 18- நாகை மாவட்டக் கழகச் செயலா ளரும், தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழகத்தலைவருமான என்.கவுதமன் வெளியிட்டுள்ளஅறிக்கையில் கூறியிருப்பதாவது:–
தமிழ்நாடு கடலோர மாவட்ட மீனவர்களின் முக்கிய தொழில் கடலுக்குச் சென்று மீன் பிடிப்பதாகும்.மீனவர்களுக்கு மீன் பிடி தொழிலை தவிர வேறு தொழில் தெரியாது. இந்த மீனவர்கள் கடலுக்குச் சென்று மீன் பிடித்து வருவதால் மீனவர்கள் மட்டும் அல்லாமல் மீன் விற்பனை யாளர், ஏற்றுமதியாளர்கள் மீன் பிடி தொழிலை சார்ந்த தொழிலாளர்கள் என லட்சக்கணக்கானவர்கள் வேலைவாய்ப்பு பெறுகின்றனர்.
மீனவர்கள் கடலுக்குத் தொலை தூரம் சென்று நாள் கணக்கில் கடலில் தங்கி மீன் பிடித்துவரும் நிலையில் அண்டை நாடான இலங்கை நாட்டின் கடற்படையினர் தமிழ்நாட்டு மீனவர்களைசிறை பிடிப்பதும், விசைப்படகைபறிமுதல் செய்வதும், மீனவர்களை கண்மூடித்தனமாகதாக்குவதும் தொடர்ந்து கொண்டே வருகிறது. இதனால் மீனவர்கள் கடலுக்கு அச்ச உணர்வுடன் மீன் பிடிக்க செல்கின்றனர்.
இலங்கைக் கடற்படையினர் தாக்குதல் ஒருபக்கம் என்றால் கடற்கொள்ளையர்களின் தாக்குதலுக்கும் மீனவர்கள் ஆளாகின்றனர்.
நாகை, இராமநாதபுரம், புதுக்கோட்டை உள்ளிட்ட தமிழ்நாடு கடலோர மாவட்டங்க ளின் மீன் பிடி தொழில் செய்து வரும் விசைப்படகு மீனவர்கள் மற்றும் நாட்டுப் படகு மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கின்ற வகையில்மீன் பிடி தொழில் செய்துவரும் மீனவர்களையும் அவர்களின் படகுகளையும் இலங்கைக் கடற்படை தொடர்ந்து கைது செய்வதும், அவர்களுடைய விசைப்படகு களையும், நாட்டுப்படகுகளையும் பறிமுதல் செய்வது போன்று தொடர்ந்து அத்துமீறிஈடுபட்டுவரும் இலங்கைஅரசை கண்டிக் காமல் தொடர்ந்து வேடிக்கைப் பார்த்தும், மீனவர்களை வஞ்சித்தும் பாராமுகத்துடன் செயல்பட்டு வரும் ஒன்றிய பாசிக பா.ஜ.க. அரசை கண்டித்து (19.7.2024 – வெள்ளிக்கிழமை) இன்று இராமேஸ்வரம் பேருந்துநிலையம் அருகில்நாகை முதல் இராமநாதபுரம் வரையில் உள்ள அனைத்து மீனவ சங்கங்கள் மற்றும் இராம நாதபுரம், நாகை, புதுக்கோட்டை மாவட்ட திராவிட முன்னேற்றக் கழகம் இணைந்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைகிறது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து மீனவர் கிராமங்களை சேர்ந்த மீனவர்கள், மீனவ கிராம பஞ்சாயத்தார்கள், மீனவ சங்கங்கள், கழக மீனவ அணியினர், நாகை மாவட்டக் கழகத்தை சேர்ந்த நிர்வாகிகள் பெரும் அளவில் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டதை வெற்றியடையச் செய்திட வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் நாகை மாவட்டக் கழகச் செய லாரும், தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழகத்தலைவருமான என்.கௌதமன் கூறியுள்ளார்.