பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன அறக்கட்டளை தலைவர் பொத்தனூர் க. சண்முகம் அவர்களது 102ஆம் ஆண்டு பிறந்த நாளையொட்டி தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்து இயக்க இதழ்களுக்கு சந்தா தொகையாக ரூ.9,000 வழங்கினார். பொத்தனூர் சண்முகம் அவர்களுக்கு கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் பொன்னாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார். உடன்: கழகப் பொறுப்பாளர்கள் உள்ளனர். (சேலம், 15.7.2024)
பழனியப்பன் – மலர் ஆகியோரின் இல்லத்திற்கு சென்ற தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் தந்தை பெரியார் மற்றும் பெரியார் பெருந்தொண்டர் மறைந்த பிரகஸ்பதி ஆகியோர் படங்களை திறந்து வைத்தார். உடன்: மோகனா வீரமணி, டாக்டர் கவுதமன், இரா. ஜெயக்குமார், கோவை சந்திரசேகரன், வழக்குரைஞர் பிரபாகரன், ஈரோடு த.சண்முகம், பொள்ளாச்சி மாரிமுத்து மற்றும் அவரது குடும்பத்தினர் மருத்துவர் எழிலன், ராஜேஸ்வரி பிரகஸ்பதி, முனைவர் கீதா, நிலா ஆகியோர். விடுதலை வளர்ச்சி நிதியாக ரூ.5,000த்தை நிலா தமிழர் தலைவரிடம் வழங்கினார் (கோவை – 14.7.2024)