புதுடில்லி, ஜூலை 18- பண மசோதாவாக தாக்கல் செய் யப்படும் மசோதாக்களை நாடாளு மன்ற மக்களவையில் மட்டும் நிறைவேற்றினால் போதும். அதற்கு மாநிலங்களவை ஒப்புதல் அளிக்கவோ, நிராகரிக்கவோ தேவையில்லை.
மாநிலங்களவையில், ஆளும் பா.ஜனதாவுக்கு பெரும்பான்மை இல்லாமல் இருந்ததால், மாநிலங்கள வையை தவிர்ப்பதற்காக ஆதார் மசோதா, சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட திருத்த மசோதா போன்ற மசோதாக் களையும் ஒன்றிய அரசு பண மசோதாவாக தாக்கல் செய்து நிறை வேற்றியது.
இதுபோன்ற மசோதாக்களை பண மசோதாக்களாக நிறை வேற்றுவது செல்லாது என்று அறிவிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட் டுள்ளன.
தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு 15.7.2024 அன்று மூத்த வழக்குரைஞர் கபில் சிபல், இந்த மனுக்களை விரைவில் பட்டியலிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.அதற்கு தலைமை நீதிபதி, இந்த மனுக்களை விசாரிக்க அரசியல் சாசன அமர்வு அமைப்பது பற்றி உச்சநீதிமன்றம் விரைவில் முடிவு செய்யும் என்று கூறினார்.