ஜம்மு, ஜூலை 18- காஷ்மீரில் ராணுவ அதி காரி மற்றும் 3 வீரர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட இடத்தில் பயங்கரவாதி கள் மற்றும் ராணுவவீரர் கள் இடையே மீண்டும் துப்பாக்கி சண்டை மூண்டது.
4 பேர் வீர மரணம்
காஷ்மீரின் தோடா மாவட் டத்தில் உள்ள தேசா வனப்பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக வந்த தகவலின் பேரின் 24.7.2024 அன்று ராணுவ வீரர்கள் அங்கு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகளுக்கும், ராணுவ வீரர்களுக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை மூண்டது. இதில் ஒருராணுவ அதிகாரி மற்றும் 3 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து அங்கு கூடுதல் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு பயங்கரவாதிகளை பிடிப்பதற்கான தேடுதல் வேட்டை முடுக்கிவிடப்பட்டது.
துப்பாக்கி சண்டை
இந்த நிலையில் 16.7.2024 அன்று இரவு 10.30 மணியள வில் காலான் பாடா என்ற இடத்துக்கு அருகே தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட ராணுவ வீரர்கள் மீது பயங்கர வாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
அதைதொடர்ந்து ராணுவ வீரர்கள் அவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்தனர். இருத ரப்புக்கும் இடையில் கடும் துப்பாக்கி சண்டை நடந்தது. சில மணி நேரங்களுக்கு இந்த துப்பாக்கி சண்டை தொடர்ந்தது.
ராணுவ வீரர்களின் பதிலடியை தாக்குப் பிடிக்க முடியாமல் பயங்கரவாதிகள் அங்கிருந்து தப்பி ஓடினர்.
அதே சமயம் இருள், மோசமான வானிலை மற்றும் கடினமான நிலப்பரப்பு ஆகியவற்றை பொருட்படுத்தாமல் பயங்கரவாதிகளை பிடிப்பதற்கான தேடுதல் வேட்டையை ராணுவ வீரர்கள் தொடர்ந்தனர்.
இந்த நிலையில் நேற்று (17.7.2024) அதிகாலை 2 மணியளவில் பஞ்சன் பாடா என்ற இடத்துக்கு அருகே ராணுவ வீரர்கள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
அதை தொடர்ந்து இரு தரப்புக்கும் இடையில் கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தது. எனினும் இந்த முறையும் பயங்கரவாதிகள் ராணுவ வீரர்களிடம் சிக்காமல் தப்பி ஓடிவிட்டனர்.
அவர்களை பிடிக்க அவர்களை ராணுவ வீரர்கள் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.