15.7.2024
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* நீட் தேர்வுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ராகுல் காந்தி நன்றி: கூட்டுக் கடமை இருப்பதாக கடிதம் வாயிலாக தகவல்.
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* மக்களவையில் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவராக கவுரவ் கோகாய். அவைத் தலைவருக்கு காங்கிரஸ் நாடாளுமன்ற குழு தலைவர் சோனியா கடிதம் அனுப்பினார்.
* ஏழு மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்றத்திற்கான 13 இடைத் தேர்தலில் பாஜகவுக்கு 2 இரண்டு இடங்களே கிடைத்தன. மோடி ஆட்சியின் மீது மக்கள் கோபம் இன்னும் தணியவில்லை என்கிறது தலையங்க செய்தி.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* கார்ப்பரேட் வரி குறைப்பு பெரும் பணக்காரர்களை ரூ.2 லட்சம் கோடியால் வளப்படுத்தியது; அதிக வரி விதிப்பால் நடுத்தர மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்: காங்கிரஸ் குற்றச்சாட்டு.
தி டெலிகிராப்:
* மோடி அரசில் புதிய மக்களவை உறுப்பினர்களை அமைச்சராக்கவில்லை; பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சி மீது அதிருப்தி.
டைம்ஸ் ஆப் இந்தியா:
* ‘கிரீமிலேயர்’ வருமான வரம்பு கடந்த 2017 ஆம் ஆண்டில் – ஆண்டுக்கு ரூ.8 லட்சமாக திருத்தப்பட்டது. அதை ரூ.15 லட்சமாக உயர்த்த அகில இந்திய பிற்படுத் தப்பட்டோர் கூட்டமைப்பு மீண்டும் வலியுறுத்தல்.
– குடந்தை கருணா